Pages

Sunday, 23 August 2015

காஞ்சி பெரியவரின் ஆன்மிக சிந்தனைகள்

 
காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.


அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.

வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.

அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.

உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவை களுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.

நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.

தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.

கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்


No comments:

Post a Comment