Pages

Saturday, 20 February 2016

கும்பகோணம மகாமஹம் ்

கும்பகோணம்  மகாமஹம்
1. காவலர்கள் மற்றும் தீஅணைப்பு வீரர்களின் அறிவுரை மற்றும் கட்டளைகளை மதியுங்கள். அவர்களுக்கு உதவுங்கள்.
2. செல்லும் வழியில் கும்பகோணத்திற்கு வெளியில் கழிப்பறை வசதிகள் உள்ளன.
3. எளிய உடையுடன் ஸ்நானம் செய்ய செல்க. செருப்பை வாகனத்தில் விட்டுவிடவும்.
4. அதிகாலை ஸ்நானம் செய்யுங்கள். எளிதில் முடியும்.

5. பெண்கள் உடை மாற்ற தனிவசதி குறைவே எனினும் அருகே உள்ள வீடுகளில் முன்பகுதி உதவும்.
6. பெண்கள் தங்களின் மேல்உடைக்குள் ஒரு நான்கு முழம் வேட்டியினை முதுகிலிருந்து முன்புறமாக கழுத்து வரை கட்டி அதன்மேல் டாப்ஸ் போட்டு கொண்டு குளித்தால், உடைமாற்ற வசதியாகஇருக்கும். பிறர் பார்வையில் இருந்து தப்பிக்கலாம். கார் வேனில் செல்பவர்கள் அதன் சீட்டினை மடக்கி வைத்து அதற்கு உள்ளே உடை மாற்றலாம்.
7. ஹோட்டல் வசதி காலை 5 மணிக்கு துவங்குகிறது. டீ எப்போதும் கிடைக்கிறது.
8. 5-6 பேராக காரில்செல்ல செலவுமற்றும்நேரம் மிச்சம்.
9. சென்னையில் இருந்து செல்பவர்கள் ECR வழி செல்லவேண்டாம்.
10 . அருகில் வைத்தீஸ்வரர், சீர்காழி, சிதம்பரம் உள்ளது. தரிசித்து மீண்டும் சிதம்பரத்தில் இருந்து வெளியே வந்தால் பண்ரூட்டி வழி அன்றே இரவில் சென்னை வரலாம்.
11. மனம் அமைதியாக பக்தியுடன் சென்று பலன் அடைவீர். தவறாது அனைவரும் செல்வீர்.
பக்தர்கள் நலனில் என்றும் தக்ஷின பாரத கும்பமேளா பிரசார சமிதி - சென்னை.

No comments:

Post a Comment