Pages

Saturday, 4 June 2016

'டுவிட்டர், யாஹூ' இணைப்பா


யாஹூ நிறுவனம், இணையதள துறையில் ஈடுபட்டு வருகிறது. டுவிட்டர், சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது. இரண்டு நிறுவனங்களுக்கும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

இந்த நிலையில், டுவிட்டர், யாஹூ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைய வாய்ப்புள்ளதாகவும், அது சம்பந்தமாக இரண்டு நிறுவனத்தை சார்ந்த உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசியதாகவும், அமெரிக்காவில் வெளியாகும், 'நியூயார்க் போஸ்ட்' என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டு உள்ளது. டுவிட்டர் மூலம், பலரும் உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்; யாஹூ நிறுவனம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைவதால் இரண்டுமே பலன் பெறும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment