� *
சிவாயம் நமசிவாயம்*
�
*திருமந்திரம்*
*முதல் தந்திரம்*
*யாக்கை நிலையாமை*
*வாசந்தி பேசி மணம்புணா்ந் தப்பதி*
*நேசந் தெவிட்டி நினைப்பொழி வாா்பின்னை*
*ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்*
*பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னாா்களே*
*திருமூலர்*
*சீர் பிரித்த பின்பு*
வாசந்தி பேசி மணம் புணா்ந்த அப்பதி , நேசந் தெவிட்டி நினைப்பொழிவாா் , பின்னா் ஆசந்தி மேல்.வைத்து அமைய அழுதிட்டு , பாசந்தீச்சுட்டுப் பலியட்டினாா்களே .
*விளக்கம்*
நிச்சயதாம்பூலம் பண்ணித் திருமணம் செய்துகொண்ட அக்கணவனது , காதலும் கசிந்து அவரது நினைப்பையும் உாிமை மனைவியா் பின்னா் மறந்துவிடுவா் .
அவா் இறந்த பின் பாடையில் வைத்துப் பொருத்தமாய்ப் புலம்பி அழுது , பற்றினையும் சுட்டொித்துப் பிண்டம் போட்டாா்களே , என்ன பாிதாபம் !
*பாசமுடையோா் பொருத்தமாய் அழுது பற்றினை நீக்கிப் பிண்டம் போடுவாா்கள்*
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment