Pages

Monday, 29 August 2016

நம்மை அவ்வப்போது புதுப்பித்து கொள்வோம்

காட்டில் மரம் வெட்டும் முதலாளியிடம் வேலை கேட்டு ஒருவர் வந்து நான் நன்றாக மரம் வெட்டுவேன் எனக்கு வேலை கொடுங்கள் என கேட்டார்
முதலாளி அவரை வேலைக்கு சேர்த்து கொண்டு புது மரவெட்டும் கருவியினை கொடுத்து குறிப்பிட்ட மரங்களை வெட்ட சொன்னார்
முதல் நாள் 15 மரங்களை வெட்டி கொண்டு வந்து முதலாளியிடம் பாராட்டு பெற்றார் அவர்
2ம் நாள் 13, 3ம் நாள் 11 4 ம் நாளிலிருந்து 10 மரங்களே வெட்டி கொண்டு வந்தார்
அவனுக்கே கஷ்டமாக இருந்தது தன் உழைப்பில் எதோ பிழை என எண்ணி முதலாளியிடம் வருத்தம் தெரிவித்தான்
அவனை அழைத்த முதலாளி ”மரம் வெட்டும் கருவியினை எப்போது தீட்டினாய் ?” என வினவினார்
அவன் சொன்னான் “அதற்கெல்லாம் எங்கே நேரம் அய்யா மரம் வெட்டவே நேரம் போதவில்லை இதில் கூர் பாக்க எங்க நேரம்”
முதலாளி சொன்னார் “ தவறு உன் உழைப்பில் இல்லை கருவியில் தான் அதை சரி செய் முதலில் “
ஆம் நாமும் அப்படித்தான் நம்முடைய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டேயிர
ுக்கிறோம் அதனை புதுப்பிக்க புது வழிகளை காணாமல் அதற்கான முயற்சிகளை செய்யாமல் ஓய்வில்லாமல் செய்து கொண்டே முன்னேற்றம் இல்லை என புலம்பி திரிகிறோம்
நம்மை அவ்வப்போது புதுப்பித்து கொள்வோம்....

No comments:

Post a Comment