இயற்கையாக தானே வரவேண்டியது சிரிப்பு! அதைக் கற்றுக் கொள்ள முடியுமா? அப்படிக் கற்றுக் கொள்ளும் சிரிப்பு என்ன பயனைத் தந்துவிடும்?
பதில்
அஹ்ஹஹ்ஹா!
தானே வர வேண்டியது சிரிப்பு! உண்மைதான் அப்படி வருகிறதா? அடி வயிற்றிலிருந்து புறப்பட்டு, உள்ளமும், உடம்பும் குலுங்க குலுங்க எவரேனும் சிரிக்கின்றனரா என்ன?
சிரிப்பு, அழகானது!
அதற்கு அமைதியான, ஆழமான அழகான ஒரு பிறப்பு உண்டு! பீறிட்டுக் கிளம்பும் ஊற்று போல, படம் விரித்து எழும் குண்டலினி பாம்புபோல அது ஒரு அதிசயப் பிறப்பாக இருக்க வேண்டும்!
ஒவ்வொரு சிரிப்பும் ஒரு நீண்ட வாழ்க்கை வாழவேண்டும்! அது உணர்வு மயமானதாக இருக்க வேண்டும்! அது உள்ளத்து அழுக்கையெல்லாம் கழுவிக் களைவதாக இருக்க வேண்டும். மலர்ந்த பூப்போல விரிந்து காணப்பட வேண்டும். அதன் ஒலி ஓர் இசையாக வெளிவர வேண்டும். அச் சிரிப்பு வாழும்போது எதிரே உள்ளவர்களின் துன்பமெலாம் ஓடி ஒளிய வேண்டும்! அதன் ரீங்காரம் நோய்களைப் போக்க வேண்டும்!
அதற்கு ஒரு இயற்கையான, வழவழப்பான மரணம் இருக்க வேண்டும். அது அதன் கழுத்தைப் பிடித்துத் திடீரென்று திருகியதாக இருக்கக் கூடாது. அச் சிரிப்பின் மரணம் ஆனந்தம் எனும் அற்புத மணத்தைப் பரப்பி நிறைவடைய வேண்டும்!
முறையாக்க் கற்ற பின் தனதாக மாற்றி அதுவாக எழும் வண்ணம் சிரித்தோமெனில், ஆஹா அதன் அழகே தனி! கடவுளே அதன் ருசி! பிரவாகமே அதன் மகிழ்ச்சி! உற்சாகமே அதன் சுழற்சி!
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா! சிரிப்புடா!
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Pages
▼
No comments:
Post a Comment