Pages

Wednesday, 7 September 2016

RSSஇன் மகத்தான சேவை.

பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் ஆடி மாசத்துக்கு பெரும் கூட்டம் வரும்.  பல ஆயிரம் கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கான பேர் நடந்து வருவார்கள்.  அதிக பட்சமாக 144 கிலோமீட்டர் நடந்து வருவார்கள்.  யாரும் உணவகங்களில் உண்ணமாட்டார்கள்.  கடையிலிருந்து தண்ணீர் வாங்கி குடிக்க மாட்டார்கள்.  வழியில் இருப்போர் வீட்டில் இலவசமாக அனைத்தும் கிடைக்கும்.  இந்த நடைபயணம் 40 நாட்கள் வரை நடக்கும்.  இது இன்றுவரை நடந்து வருகிறது. 

இத்தனை பேர் வந்து போன பின்னர் அந்த கிராமங்களில் வியாதிகள் வரும்.  பலருக்கு உடல் நிலை கெடும்.  காரணம், இத்தனை லட்சம் பேர்கள் வந்து போன பின்னர் அவர்கள் போன மலஜலம் ஆங்காங்கே இருந்து, ஈக்கள் மொய்த்து வியாதிகளை பரப்பும்.  இதுநாள்வரை, மக்கள் இதை பாண்டுரங்கனுக்காக பொறுத்துக்கொண்டு இருந்தார்கள்.  இந்த பிரச்னையை RSS கையில் எடுத்துக்கொண்டது.  இதை நாம் தீர்க்கவேண்டும் என்று திட்டம் போட்டது.  RSS என்றால் ஏதோ ஆகாயத்திலிருந்து யாரும் குதிக்கவில்லை.  எல்லோரும் உங்களை என்னை போல சாதாரணமாக அலுவலகம், பள்ளி,கல்லூரி சென்று வருவோர்தான்.  நல்லது செய்யவேண்டும் என்று எண்ணுவோர் ஒன்று கூடினால் நல்லதுதானே நடக்கும்?  அது போல. 

ஒரு பட்டியலை தயார் செய்தார்கள்.  அதில் 8500 பேர் பெயர்கள் வந்தது.  இவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டார்கள்.  அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டார்கள்.  இதனால்தான் வியாதி பரவுகிறது என்று சொன்னார்கள்.  அரசாங்கம் வரும் வழியில் இருக்கும்   எல்லா கிராமங்களிலும் கழிப்பறை ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தது.  ஆனால், அதை எல்லோரும் உபயோகப்படுத்தவேண்டுமே?  தண்ணீர்?  இதை RSS ஏற்றுக்கொண்டது. 

ஒரு கிராமத்துக்கு 500 கழிப்பறைகள் வீதம் தற்காலிகமாக, நிரந்தரமாக என்று ஏற்பாடு செய்தார்கள்.  வரும் வழியில் அனைவரையும் கழிப்பறையை உபயோகப்படுத்த வற்புறுத்தினர்.  RSSகாரர்களே  கழிப்பறையை சுத்தம் செய்தனர்.  யாரும் உள்ளே செல்ல முகம் சுளிக்கவில்லை.  இப்படியே 40 நாட்களும் போனது.  டர்ன் போட்டு மாறிமாறி பார்த்துக்கொண்டனர்.  ஊரில் வியாதி இல்லை.  பெரும் காரியம் நிறைவேறியது. 

மக்களுக்கு பெரும் சந்தோஷம், ஆச்சரியம்.  இந்த முறை எந்த வியாதியும் பரவவில்லை.  எப்பேர்ப்பட்ட வேலையை செய்துவிட்டீர்கள் என்று அனைவரும் பாராட்டினர்.  நாங்களும் ஏதாவது செய்கிறோம் என்று சேர்ந்து கொண்டுள்ளார்கள்.  தங்களால் இயன்றவரை என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றனர். 

இப்போது பக்தர்கள் 10,000 கிராமங்களிலிருந்து வந்தார்கள் அல்லவா?  அவர்கள் அனைவரும் சங்க தொடர்பாளர்களாகி தங்கள் கிராமங்களில் கழிப்பறை வசதி செய்ய வேலை செய்து எங்கெங்கெல்லாம் கட்ட வேண்டுமோ அங்கெல்லாம் அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்து கட்டி முடிக்கிறோம் என்று இறங்கியுள்ளனர். 

வந்தே மாதரம்.

No comments:

Post a Comment