Pages

Thursday, 8 December 2016

#ஃபிடல் காஸ்ட்ரோ

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.- காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.
2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

No comments:

Post a Comment