Pages

Sunday, 1 January 2017

அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து சீன அச்சறுத்தலுக்கு முடிவு கட்டிய மோடிஜி

அருணாச்சல பிரதேசத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 60.

அருணாச்சல மக்கள் கட்சி சார்பில் முதல்வராக பேமா காண்டு உள்ளார். இந்த கட்சிக்கு மொத்தம் 43 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்நிலையில், பேமா காண்டு மற்றும் எம்எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.,வுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், கட்சியை இணைக்க முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பேமா காண்டு உட்பட 33 எம்.எல்.ஏ.க்கள் பாஜக வில் இணைந்தனர்.

இதனால் மாநிலத்தில் பா.ஜ.க வின் பலம் 47 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சியின் பலம் 10 ஆக குறைந்தது.

ஆட்சி அமைத்தது பா.ஜ.க...

தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சபாநாயகரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரியதுடன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் முன்பு நிறுத்தியது.

இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஆட்சி அமைக்க பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுத்தார்.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க  47 எம்.எல்.ஏக்களும்,
அருணாச்சல் மக்கள் கட்சிக்கு 10,
காங்கிரசுக்கு 3 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.

இனியொரு விதி செய்வோம்...

No comments:

Post a Comment