Pages

Thursday, 12 January 2017

பொங்கல் வைக்க நல்ல நேரம


இந்த துர்முகி ஆண்டு தை திங்கள் 1- நாள் ( 14-01-2017 ) சனிக்கிழமை பொங்கல் திருநாள். கிஷ்ண பஷம் துவிதியை, ஆயில்யம் நட்சத்திரம் 02- பாகம் மந்த யோகம் ( யோகம் தோஷம் இல்லை ) கூடிய சுப நன்னாளில் காலை மணி 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் மகரம் லக்னத்தில் குரு ஓரையில் அடுப்பு திறந்து பொங்கல் புதிய பானை, அல்லது பாத்திரம் வைத்து அதற்க்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள்செடி கொத்தில் உள்ள பச்சை மஞ்சள் கொம்பை நூல் கயிற்றில் கங்கணமாக தயாரித்து புஷ்பம் வைத்து பொங்கல் பாத்திரம் ( அல்லது ) புதிய பானைக்கு கங்கணம் கட்டி, அவரவர் சம்பிரதாயபடி பொங்கல் செய்யவும்.

குறிப்பு : பூஜைக்கு வேண்டிய சாமான்களை முன்பே தயாரித்து வைத்துக்  கொள்ளவும்.
Wish u happy pongal

No comments:

Post a Comment