Pages

Wednesday, 22 March 2017

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்க

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு. ஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும்.  ஆதார் அட்டையில் உங்கள் விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தப்பாகத்தான் இருக்கும்.  நீங்க இப்ப இருக்கிற விலாசம் ஸ்மார்ட் கார்டில வர வேண்டும் என்றால் உடனே, www.tnpds.com என்ற இணைய தளத்தில் போய் பயனாளர் நுழைவு இடத்தில் கிளிக் செய்தால், உங்க போன் நெம்பர் கேட்கும். ரேசன் கடையில நீங்க கொடுத்த மொபைல்  நம்பரை அதில் பதிவு செய்தால், உங்க போனுக்கு ஒரு நம்பர் வரும்.  அதை பதிவு செய்தால் உங்க ரேஷன் கார்டு பற்றிய விவரம் வரும்.  அதில் விலாசம் என்ற இடத்த கிளிக் செய்தால் ஆதார் அட்டை விலாசம் அதில் இருக்கும்.  பக்கத்திலேயே, புதிய விலாசம் பதிவு செய்வதற்கான வசதியும் இருக்கும்.  அதில் உங்க புதிய முகவரியை பதிவு செய்தால் வரஉள்ள ஸ்மாட் கார்டில் உங்க புது முகவரி வரும்.  உடனே உங்க முகவரியை சரி பாருங்க. ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.👍
இது உபயோகமுள்ள தகவல் என்று உங்கள் மனதில் தோன்றினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment