Pages

Monday, 3 July 2017

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

Share செய்யமுடியாததால் Copy & paste பண்ணியிறுக்கேன்
Super பதிவு  Kumar

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

இங்கே வெறும் பீட்சாவையும் கடலை மிட்டாயும் ஒப்பிட்டால் போதுமா??

எனக்கு தெரிந்தவரை நான் ஒரு சாமான்யனாக காலை முதல் இரவு வரை நான் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் GST வரி குறைவாகவோ அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது....

அவையாவன...
காலை எழுந்ததும் பற்பசை,துலக்கி வரி குறைக்கப்பட்டுள்ளது...

நான் குளிக்கும் சோப்பு,ஷாம்பு வரி குறைப்பு...

நான் உடுத்தும் ஆயத்த ஆடை விலை குறைப்பு...

நான் அணியும் 500ரூபாய் மதிப்புள்ள காலணி வரி குறைப்பு(500-க்கு மேல் வரி அதிகம்)

அத்தியாவசியம் ஆகிப்போன ஸ்மார்ட்ஃபோன் வரி குறைப்பு...

டீத்தூள் வரி குறைக்கப்பட்டுள்ளது...
காலை உணவு இட்லிக்கு தேவையான அரிசி,
உளுத்தம் பருப்பு வரி குறைப்பு...

மதியம் உணவுக்கு தேவையான அரிசி,பதப்படுத்தபடாத காய்கறிகள்,குழம்புக்கு தேவையான பருப்பு வகைகள்,எண்ணெய் வகைகள் வரி குறைப்ப
ு(மேந்தட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் வரி அதிகம்)...தயிர் வரி குறைப்பு

உப்பு வரி விலக்கு...கோதுமை வரி குறைப்பு

நான் அசைவ விரும்பியாக இருந்தால் பதப்படுத்தப்படாத மீன்,இறைச்சி வரி குறைப்பு...

இரவு நான் குடிக்கும் பால் வரி குறைப்பு...

இவை அனைத்தும் நம்நாட்டில் 3-ல் ஒரு பங்கு வகிக்கும் அடித்தட்டு வர்க்கம் உபயோகிக்கும் பொருட்கள்...

சரி முதலில் மனிதன் அடிப்படை தேவையை பற்றி அறிமுகம்

1.உணவு(மேலே விளக்கம்)

2.உடை(ஆயத்த ஆடை விலை குறைப்பு)

3.இருப்பிடம்

இருப்பிடம் அமைப்பதற்கு தேவையான சிமெண்ட் வரி குறைப்பு
மணல் ஜல்லி வரி குறைப்பு

இவை தவிர்த்து சாமாண்ய சீமாட்டி அலங்காரத்திற்கு பவுடர்,ஸ்டிக்கர் பொட்டு,குங்குமம் வரி இல்லை...

இது சாமான்யனுக்கான அரசு

யோக்கியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை...

நாம் வல்லரசு நாடு என வாய் பிளந்து அன்னார்ந்து பார்க்கும் அமெரிக்காவில் 90% மக்கள் முறையாக வரி செலுத்துகின்றனர்...

ஆனால் நாமோ 10% பேர் கூட முறையாக வரி கட்டுவதில்லை

இது எவ்ளோ பெரிய கேவளம் தெரியுமா??

GST வந்தால் கள்ளச்சந்தை ஒழிந்து அரசுக்கு முறையாக வரி செல்லும் அதன்மூலம் நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்...

என்னவென்று தெரியாமலே விலைவாசி ஏறியதா இறங்கியதா என ஒப்பிட்டு பார்க்காமலே யாரோ சில மோடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சிலர் அனுப்பும் நாலைந்து மெசேஜ் படித்துவிட்டு சுயமாக சிந்திக்காமல் மூளையை முழங்காலில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தை போல் இல்லாமல் சுய அறிவோடு அனுகுங்கள்...

காலம் பதில் சொல்லும்•••
(அவசியம் பகிரவும்)

நன்றி திரு.  Kumar

No comments:

Post a Comment