குமரி: குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையோ அல்லது இரவோ புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஓகி (ockhi) என பெயரிடப்படும். இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது ரேடாரில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டிய கடற்கரையில் இந்த புயலானது செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கு அறிகுறியாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இது பற்றி பேசிய வருவாய்துறை ஆணையர் பலத்த சூறைக்காற்று காரமணாக குமரி மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்டார். நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் கூடும் என்பதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார். மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Pages
▼
No comments:
Post a Comment