Pages

Saturday, 3 February 2018

நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்து பயனுற வாழ்வோம்

ஏழை ஜெயலலிதா
........,.................................

ஆம், ஏழை ஜெயலலிதா போய் ஒரு வருடம் ஆகி விட்டது.

அவரால் தன்னுடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லை. 

ஆம்..... சர்வ வல்லமை பொருந்திய.......அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்.......

இன்று வெறும் நமது நினைவுகளில் மட்டுமே இருக்கிறார். 

ஆடி அடங்கும் வாழ்கையடா.....
ஆறடி நிலமே சொந்தமடா.........
என்று ஒரு ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டு மறைந்து விட்டார்.

அவர் வாழ்நாளில் பவனி வந்த விலையுயர்ந்த கார்களில் அவரது உடல் செல்லவில்லை......

அரசு மரியாதையான பீரங்கி வண்டியில் தான் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.  வெறும் கையுடன்..... சொந்தமாக வாங்கிய வாகனங்களில் அல்ல.

நல்ல வழியிலோ அல்லது வேறு வழிகளிலோ சம்பாதித்த செல்வங்களை யாரோ அனுபவிப்பதற்காக விட்டு விட்டு சென்று விட்டார்.

1197 ஏக்கர் நிலம் திருநெல்வேலியில்,

200 ஏக்கர் வாலாஜாப்பேட்டையில்,

100 ஏக்கர் ஊத்துக்கோட்டையில்,

25 ஏக்கர் சிறுதாவூரில்,

300 ஏக்கர் காஞ்சீபுரத்தில்,

14.5 ஏக்கர் திராட்சைப் தோட்டம் - ஜீடிமெட்லா (ஆந்திராவில்),

1600 ஏக்கர் தேயிலைத் தோட்டம்.....
ஒரு பங்களாவுடன் கொடநாடு, நீலகிரி மலையில்......

இவை தவிர சென்னையில் போயஸ் தோட்டத்தில் 24,000 சதுர அடியில் கட்டப்பட்ட 100 கோடி மதிப்புள்ள (வேதா நிலையம்) பங்களா,

4 வணிக வளாகங்கள்,

800 கிலோ வெள்ளி,

28 கிலோ தங்கம்,

750 ஜோடி காலணிகள்,

10,500 புடவைகள்,

91 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்,

இவை தவிர பல வாகனங்கள், சொகுசு கார்கள்....... இந்த கணக்கில் பினாமி சொத்துக்கள் இல்லை.

இது தான் வாழும் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பாடம்.

*மேலிடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டால், சுற்றம் நட்பு என்று யாருக்கும் விடைபெறுகிறேன் என்று சொல்லக்கூட நேரமிருக்காது.*

யாராலும் அந்தப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது.......

*கோடானுகோடி உடன் பிறவாத சகோதர சகோதரிகளாகட்டும், ஆதரவாளர்கள் ஆகட்டும், உலகின் தலை சிறந்த மருத்து நிபுணர்கள் ஆகட்டும்....... யாராலுமே தடுத்து நிறுத்த முடியாத ஒரு பயணம் நம் எல்லோருக்கும் காத்திருக்கிறது.*

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

நல்ல வழியிலோ, அராஜகமான. தவறான வழிகளிலோ, அடுத்தவர்களை ஏமாற்றி, காயப்படுத்தி சம்பாதித்தத பணம், நகை, சொத்து...... எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்...... இவ்வுலகைவிட்டு செல்லும் போது

சிலருக்கு........ வாய்க்கரிசியோ.......
கடைசி சொட்டு தண்ணீரோ அல்லது ஈமச்சடங்குகளோ...... ரத்த சொந்தங்கள் இருந்தும் செய்ய முடியாது, கிடைக்காது......

மறைந்த முதல்வரின் அந்திமக் காரியங்களை பார்த்த நம் அனைவருக்கும் தெரியும்.

இதிலிருந்து *நாம் கற்றுக்கொள்ள, பின்பற்ற வேண்டிய பாடம் என்ன?*

இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெறும் பயணிகள் தான்......... அவரவர் தாம் எங்கே இறங்க வேண்டுமோ அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும்...... ஆகையால் அகந்தையை ஒழித்திடுவோம், நாம் யார் என்பதை உணர முயற்சி செய்வோம், வாழும் கடைசி நிமிடம் வரை நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்து பயனுற வாழ்வோம்.       படித்ததில் பிடித்தது

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment