Pages

Saturday, 3 February 2018

மஹாசிவராத்திரி சாதனா

*மஹாசிவராத்திரி சாதனா*

மஹாசிவராத்திரி – கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஈஷா யோக மையத்தில் சத்குருவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்று வருகிறது. அந்த ஒரு இரவில் மட்டும் கண்விழித்திருந்தால் போதுமா? அந்நாள் வழங்கும் பலன்களை சிறப்பான முறையில் பெறுவது எப்படி? இதற்கு விடையாய், மஹாசிவராத்திரி நாளினை நோக்கி நம்மை தயார்படுத்திக் கொள்ள சத்குரு சில குறிப்புகளை வழங்கியிருக்கிறார். “சிவா” எனும் அந்தத் தன்மையை உணர, இதோ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு…

மஹாசிவராத்திரி இரவு நமக்கு வழங்கும் எல்லையில்லா சாத்தியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் விதமாக சத்குரு சில பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள். உடலளவில் ஒருவர் பல நலன்கள் பெற இந்தப் பயிற்சி உறுதுணையாய் இருக்கும்.

இதனை, மஹாசிவராத்திரிக்கு முந்தைய
40, 21, 14, 7
அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும்.

*8 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.*

பிப்ரவரி 13ம் தேதி, மஹாசிவராத்திரி அன்று சாதனா நிறைவுபெறும். மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நேரடியாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ கலந்துகொண்டு சாதனாவை நிறைவுசெய்யலாம்.

*சாதனா துவங்கும் நாட்கள்*

🍃 *40 நாள் சாதனா* – ஜனவரி 3ம் தேதி

🍂 *21 நாள் சாதனா* – ஜனவரி 22ம் தேதி

🍃 *14 நாள் சாதனா* – ஜனவரி 29ம் தேதி

🍂 *7 நாள் சாதனா* – பிப்ரவரி 7ம் தேதி

🍃 *3 நாள் சாதனா* – பிப்ரவரி 11ம் தேதி

இந்த மஹாசிவராத்திரி சாதனாவின் பலன்குறித்து சத்குரு பேசும்போது, “3 வருடம் ஆன்மீகப் பயிற்சி செய்துகிடைக்கும் பலனை இந்த மஹாசிவராத்திரி சாதனாவை 40 நாட்கள் செய்வதில் பெற்றுவிடலாம்,” என்றார்.

*சாதனாவிற்கான குறிப்புகள்*

*உணவு:*

 தினமும் இருவேளை உணவு மட்டும். முதல் உணவு மதியம் 12 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் 8-10 மிளகு மற்றும் 2-3 வில்வ இலைகள் அல்லது வேப்பிலைகளை இரவே தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.

முந்தைய இரவே நீரில் ஊறவைத்த நிலக்கடலைகளை உண்ணலாம்.

இடையே பசியெடுத்தால், தேன்-மிளகு-எலுமிச்சை-தண்ணீர் கலந்த சாற்றை பருகலாம்.

*பழக்கம்*: புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் அசைவம் அறவே கூடாது.

*கருப்புத் துணி*: ஆண்கள் வலது மேற்கையிலும், பெண்கள் இடது மேற்கையிலும் எப்போதும் கட்டியிருக்க வேண்டும். இந்தத் துணி தேவையான அளவு நீளம், 1 இன்ச் அகலம் உடையதாய் இருக்கட்டும். அருகிலுள்ள கடையில் வாங்கிக்கொள்ளலாம்.

*உடை*: வெள்ளைநிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியலாம்.

*குளியல்*: தினமும் இருமுறை, ஸ்நானப் பொடி பயன்படுத்தி குளிப்பது நலம்.

*விபூதி இட்டுக்கொள்ளுதல்*: 

ஆக்ஞா (நெற்றிப்பொட்டு), விஷுத்தி (தொண்டைக்குழி), அனஹதா (நெஞ்சுக்குழி), மணிபூரகா (தொப்புளுக்கு சற்று கீழே) சக்கரங்களில்.

*தினசரி சாதனா*

*சிவநமஸ்காரம்:*
காலி வயிற்றில், சூரியோதயத்திற்கு முன்னர் 12 முறை அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 12 முறை செய்யவேண்டும்.

அதைத் தொடர்ந்து “சர்வேப்யோ” மந்திரத்தை 3 முறை உச்சாடனை செய்ய வேண்டும்.

*ஆஉம் சர்வேப்யோ தேவேப்யோ நமஹா*

(விண்ணுலக & தெய்வீக உயிர்களுக்கு தலைவணங்குகிறோம்)

*ஆஉம் பஞ்சபூதாய நமஹா*

(பஞ்சபூதங்களுக்கு தலைவணங்குகிறோம்)

*ஆஉம் ஸ்ரீ சத்குருவே நமஹா*
(ஸ்ரீ சத்குருவிற்கு தலைவணங்குகிறோம்)

*ஆஉம் ஸ்ரீ ப்ருத்வியை நமஹா*

(பூமித் தாய்க்கு தலைவணங்குகிறோம்)

*ஆஉம் ஆதியோகீஷ்வராய நமஹா*

(யோகாவை தோற்றுவித்தவனுக்கு தலைவணங்குகிறோம்)

*ஆஉம் ஆஉம் ஆஉம்*

🍃சிவநமஸ்காரம் மற்றும் மந்திர உச்சாடனை முடிந்தபின், இலைகளை மென்று சாப்பிடவும். மிளகை எலுமிச்சை சாற்றில் கலந்து பருகவும், நிலக்கடலையையும் சாப்பிடவும்.

*சிவநமஸ்காரம் – கவனிக்க வேண்டியவை:*

★ கர்ப்பிணி பெண்கள் சிவநமஸ்காரம் செய்ய வேண்டாம்

★மாதவிடாய் காலத்திலும் பெண்கள் சிவநமஸ்காரம் செய்யலாம்.

★ஹெர்னியா பிரச்சனை உள்ளவர்கள் நாற்காலி, மெத்தை பயன்படுத்தி சிவநமஸ்காரம் செய்யலாம்

*விளக்கேற்றுதல்:*

விளக்கேற்றி வைத்து, “யோக யோக யோகேஷ்வராய…” உச்சாடனம் 12 முறை செய்யுங்கள். காலையில் ஒருமுறை மாலையில் மற்றொரு முறை. குறிப்பாக சந்தியா காலங்களில் செய்யலாம்.

*சந்தியா காலங்கள்:*

 சூரியோதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் 20 நிமிடங்களுக்கு முன்பு, இருபது நிமிடங்களுக்கு பின்பு.

யோக யோக யோகேஷ்வராய

பூத பூத பூதேஷ்வராய

கால கால காலேஷ்வராய

ஷிவ ஷிவ சர்வேஷ்வராய

ஷம்போ ஷம்போ மஹாதேவாய

*பயிற்சி நிறைவுபெறும் மஹாசிவராத்திரி நாளன்று*

தியானலிங்கம் வீற்றிருக்கும் சக்திவாய்ந்த கோவை ஈஷா யோக மையத்தில் உங்கள் சாதனாவை நிறைவுசெய்வது சிறந்தது.

*வீட்டில் நிறைவு செய்வதற்கு:*

மஹாசிவராத்திரி நாளன்று (பிப்ரவரி 13) ஈஷா யோக மையம் வர முடியாதவர்கள் அடுத்த அமாவாசைக்குள் (மார்ச் 17) ஈஷா யோக மையத்தில் சாதனாவை நிறைவு செய்யலாம்.

மஹாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்.

“யோக யோக யோகேஷ்வராய” மந்திரத்தை 112 முறை உச்சரிக்கவும்.

உதவி தேவைப்படும் மூவருக்கு உணவோ, பணமோ வழங்கவும்.

3 அல்லது 5 இலைகளைக் கொண்ட வில்வம் அல்லது வேம்பை தியானலிங்கத்திற்கோ, தியானலிங்க படத்திற்கோ அர்ப்பணம் செய்யவும்.

கையில் கட்டியிருக்கும் கறுப்புத் துணியை கழட்டி, தியானலிங்கத்தின் முன்புள்ள நந்திக்கு அருகே கட்டவும்.

உங்கள் வீட்டிலோ, உங்கள் மையத்திலோ நிறைவு செய்பவர்கள், துணியை எரித்து அந்தச் சாம்பலை கை கால்களில் பூசிக்கொள்ளவும்.

112 அடி உயரமுள்ள ஆதியோகியின் முழு பிரகாரத்தையும் ஒருமுறை வலம் வரவேண்டும்.

*சாதனா பற்றிய சந்தேகங்களுக்கு*

mahashivarathri@ishafoundation.org

“கண்விழித்திருக்கும் ஓர் இரவு” என்றில்லாமல், அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். “சிவா” எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் உணர வேண்டும்!

*ஈஷா யோகா BHEL*

No comments:

Post a Comment