Pages

Wednesday, 28 August 2019

#மீனவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

***************************************
* #மீனவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்*
****************************************
தங்கச்சிமடம் ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவர்களுக்கான  மதிப்பு கூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு என மீன்பிடி தொழில் சார்ந்த சிறப்பு படிப்புகளை ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பூம்புகார் அனைவருக்கும் மீன் மையத்தின் மூலமாக செயல்படுத்த இருக்கிறோம்.
மேலும் படிப்புகளுக்கான கோட்பாடு (Theory) பயிற்சிகள் வீடியோ காண்பிரன்ஸ் முறையிலும் செயல்முறை பயிற்சிகள் (Practical) நேரடியாக பூம்புகாரில் உள்ள அனைவருக்கும் மீன் மையத்தின் ஆய்வு கூடத்திலோ அல்லது அங்கு இருக்கிற வல்லுனர்களை கொண்டு தங்கச்சிமடம் கிராம வள மையத்திலோ அளிக்க பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
முதல் பயிற்சியாக சுகாதாரமான முறையில் உலர்மீன் (கருவாடு) தயாரிப்பது குறித்த பயிற்சி செப்டம்பர் 3 முதல் நடைபெற இருக்கிறது. எனவே ஆர்வமுள்ள மீனவர்கள், மீனவ மகளிர் சுய உதவி குழுவினர் உடன் தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு 04573-251799, 9944407047 8012421007

No comments:

Post a Comment