Pages

Sunday, 28 June 2020

#தமிழக_அரசுக்கு பணிவன்புடன் ஓர் #வேண்டுகோள்

*தமிழக அரசுக்கு பணிவன்புடன் ஓர் வேண்டுகோள்.* 

தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம். ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் ,நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில்கள் அனைத்து வகையினறும் கண்டிப்பாக அதிகமாக பாதிக்க படுவார்கள். 

இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிடுமா.கண்டிப்பாக 
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் கொரோனாவில் இறப்பதைவிட பட்டினியால் இறப்பது அதிகமாகிவிடும்.
 
மற்றும் 

Doctors, IAS OFFICERS இவர்களை வைத்து நீங்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கேட்டால் அவர்கள் தொடர்ந்து போட்டுகொண்டே இருங்கள் என்று தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு வேலையும் வருமானமும் கிடைத்துக்கொணடிருக்கும். 
ஓரு ஏழை மற்றும் விவசாயிகள் ,
நடுத்தர மக்கள் ,சிறு வணிகர்கள், சில்லரை வணிகர்கள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் கேட்டு பாருங்கள் அவர்கள் தயவு செய்து இனிமேல் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம் என்று சொல்லுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும் வறுமையின் துயரம்.
 *மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாது.*

 எனவே கொரோனா வோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை 
இருந்து விடலாம் . ஆனால் வருமையலும்
பயத்திலும் வாழ வேண்டிய நிலமை இனி வேண்டாம். தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 ஆனால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கட்டும்.

 *மாஸ்க் போடவில்லை என்றால் அபராதம் 500 முதல் 1000 ரூபாய் வரை போடுங்கள்.*

 இதுபோல் சில விதிமுறைகளை பின்பற்றி மக்களை வாழவிடுங்கள். 

 தயவு செய்து இனிமேல் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டாம்.

 இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து போட்டுகொண்டே போனால் மட்டும் கொரோனா வைரஸ் சரியாகிவிடாது என்பது மட்டும் உண்மை.

 அது மட்டுமல்ல இங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களை பரிசோதித்துவிட்டு அனுப்பி விட்டு விடலாமே. அதுக்கு எதற்க்கு E PASS? மற்றும் அவர்களை சொந்த ஊரில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனுமதிக்க சொல்லுங்கள். மற்றும் அப்படி அவர்களை சொந்த ஊருக்கு பரிசோதித்து அனுப்பி விட்டால் இங்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும். மற்றும் அவர்களும் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இங்கிருந்து தினமும் பயந்து கொண்டு செலவிற்கு பணம் இல்லாமலும் பயந்துகொண்டும் ஏன் வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஏன் பரிசோதித்து அனுப்ப மறுக்கின்றனர். தயுவு செய்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் குடும்பத்தினரை பரிசோதித்து அனுப்பி விடுங்கள் . 

இதில் தவறு இருப்பதாக தெரிந்தால் மறுப்பு தெரிவிக்கவும்.

சரியென்றால் அரசாங்கத்திற்க்கு மற்றும் நேர்மையான மீடியாவிற்கு கொண்டு செல்லும்வரை அனைவரும் forward செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment