Pages

Monday, 1 August 2016

நாளை ஆடி அமாவாசை 02.08.2016

ஆடி 18 அன்று காவிரி, தாமிரபரணி நதிகளில் நீராடினால் சகல பாவங்களும் ,தோசங்களும் போகும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.காசியில் சென்று கங்கையில் நீராடிய பலனை கொடுக்குமாம்.

நாளை ஆடி அமாவாசை - சூரியன், சந்திர பகவானுக்கு உரிய ராசியாகிய கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். 


பித்ரு காரகனாகிய சூரியன், மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு உரிய கடக ராசி மண்டலத்தில், சந்திரனுக்கு நேராக ஒன்றிணையும் காலம் ஆடி அமாவாசை. 



ஆகையால் தான், இறந்துவிட்ட முன்னோர்களுக்கு உரிய காரியங்களை ஆடி அமாவாசையில் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கியும், முன்னோர்களின் பூரண ஆசிகளையும் பெற்றுத் தரும்.





குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்த நாள்....குலதெய்வத்துக்கு 16 வித அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட உன்னத நாள்...அன்னதானம்,தர்மம்,ஆடை
தானம் செய்ய ஆயுள் வளரும்.

No comments:

Post a Comment