Thursday 20 March 2014

பாரத முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி அதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த முயன்றாலும் இன்று வரை சமுதாயத்தில் உள்ள பல்வேறு சிக்கலை தீர்க்க இயலவில்லை என்பது நாம் அறிந்ததே, இந்த சமுதாய பிரச்சனைகளை அகற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தன்நலமற்ற தலைவர்கள் காணாமல் போனதும் சுயநல வாழ்க்கை முறையுமே. 

தற்போது பாரத தாயின் குழந்தைகளான இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தாம் ஆற்ற வேண்டிய கடமை என்னவென்று சிந்திக்கும் காலம் தொடங்கிவிட்டது ஆனால் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களை வழிநடத்தும் கல்வி பாடத்திட்டமோ மற்றும் அவர்கள் செய்யும் தொழிலோ வேலையோ கற்றுத்தரவில்லை. 

முதலில் நாம் செய்ய வேண்டியது இன்றைய தலைமுறைக்கு போதிய பொருளாதாரம், தொழிற்கல்வி, சுயதொழில் உத்திகள் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் புதுப்புது கண்டுபிடிப்புகளை செய்ய தூண்டி விடவேண்டும் இவை அனைத்திலும் இயற்க்கையும் விவசாயமும் சீர்கெடாத வகையில் செயலாற்ற இளைஞர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 சுயநலமும், பொருளாதர சுரண்டலுமே தொழிலாக செய்யும் பல அரசியல் தலைவர்களையும் அரசாங்க ஊழியர்களையும் நம்பி இந்திய முன்னேற்றம் இல்லை. வலிமையும் தன்நலமற்ற தியாக உள்ளம் கொண்ட புதல்வர்களின் தோல் மேல் பயணம் செய்யவே இந்திய தாய் விரும்புகிறாள் அப்படிப்பட்ட இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து நாடும் வீடும் செழிக்க உழைக்க வேண்டும் என்று உறுதி கொள்வோமாக.

கருவில் சுமந்தவளையும் சேர்த்து சுமந்தது இந்த மண்தானென்று மனதில் வைத்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் கடுகளவும் தோன்றாது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான காரணிகளாக சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி மற்றும் பல தேசத்திற்காக வாழ்ந்த தலைவர்கள் நமக்கு விட்டு சென்ற பாடம்,
 

Ø அறியாமையை அகற்றும் கல்வ

Ø ஏழ்மையை போக்கும் பொருளாதாரம

Ø பசியினை போக்க உணவு உற்பத்த

Ø இயற்கையை சிதைக்காத தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்ச

Ø சுயதொழில் முன்னேற்றம

Ø சமுக நாட்டம் கொண்ட ஆசிரியர்கள் கலைஞர்கள

Ø இவை அனைத்திற்கும் ஆதாரமான விவசாயம

Ø வழிநடத்தி செல்ல சுயநலமற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள்.

 அனைத்தையும் நாம் தனியாக செய்ய இயலாது, இந்த துறைகளில் எது நமக்கு ஏற்புடையதோ அதை நன்கு கற்று சிறப்புடன் செயலாற்ற வேண்டும், இப்படி பல துறைகளில் இணைந்து செயல்படும் போது நாடும் வீடும் செழிக்கும்.

 

Thanks Dear: .பாஸ்கர,திருவண்ணாமலை.

 

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing