Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

Sunday, 6 September 2015

விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம். பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் … Continue reading விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு? →


Thursday, 29 January 2015

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்

 பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.
முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.
தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.
குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.
கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.
நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.
பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும்.
சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.



உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஐவலந்தம் சர்வதோ முகம் ந்ருசிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்

Saturday, 8 March 2014

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்


ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்
இருக்கிறது ஏலகிரி ஓட்டல். 


அங்குச்
சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்
காசு கேட்பதில்லை. பணத்துக்குப்
பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா? 

விசாரித்தபோதுதான்
மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். 

விஷயம் புரிந்தது. 

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), 

‘பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’,

 ‘வாரம் 100
மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’,

 ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்
மாலை வரை பாதி விலையில் உணவு’ 

இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன. 

ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.

அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.

ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர். 

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. 

பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்
அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். 

அவர்கள்
பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்
அவர்கள் ஜோலார்பேட்டையில
ேயே சுற்றித்திரிகின்றனர்.

இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூட
உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது”
என்கிறார் நாகராஜ். 

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாத
நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான
உணவை அவர்களது குடும்பத்தினர்
வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். 

நாகராஜின்
மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில்
இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை. வழக்க
மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக
சமைக்கிறேன். 

5
கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்
மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்
இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்
தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாக
இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
‘வாடி நிற்கும்' நாகராஜ்

Wednesday, 26 February 2014

A Rapturous Night with the Divine - Mahashivarathri





" Shiva means the Auspicious One, 
settled in Ananda, Bliss, Final Beatitude,
 that lies beyond the trappings of a mind 
caught in mundane desires and fears. 
Worship and celebration of Him - the Divine 
Personification of That Ananda, Bliss, 
Final Beatitude is Mahashivaratri. 

Happy Shivaratri to all my friends... "



"Maha-Sivaratri" is a Hindu festival observed on the night of the four­teenth day of the dark half in the month of 'Magha', in Tamil 'Maasi', corresponding to the English months 'February—March', in honour of Siva, one of the Hindu Trinity, representing the destructive aspect in the universe.Though generally, the night time is considered sacred and suitable for the worship of the feminine aspect of' the deity and the day time for that of' the masculine, yet on this particular occasion Siva is worshipped during the night time, and as a matter of fact, it is specially enjoined to be observed then. The observance of the Vratha is believed to secure for the devotee immunity from the eftects of sin committed either wittingly or unwittingly. The night is divided into four quarters, each quarter going by the name of a Jama called also Yama and pious people keep awake during every one of it , worshipping Iswara.

Sunday, 2 February 2014

6.2.2014 ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்!!!


ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;

தை 24 6.2.2014 வியாழன் காலையில் குளிக்கும்போது தலையின் மீது 3 எருக்கு இலை,சிறிது மஞ்சள் அரிசி,3 அருகம்புல்,பசுஞ்சாணம் இவைகலை வைத்து கிழக்கு முகமாக நின்று தண்ணீர் ஊற்ரி குளிக்கவும்.ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம்..நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்..!

Wednesday, 29 January 2014

உங்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்!!!

நாளை வியாழக்கிழமை தை அமாவாசை வருகிறது....முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பவர்கள் அவசியம் அதனை செய்து விடுவது நல்லது..இதனால் உங்கள் குடும்பம் மேன்மை அடையும் என்பது உறுதி

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing