Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, 6 September 2015

கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள்

கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ… 1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின், ஆறாவது லோகோ. 2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை … Continue reading கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள்


கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்

நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் … Continue reading கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்


பேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம்

ஃபேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே தொலைப்பேசி எண்ணை கொண்டு ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது, மற்றொரு நடவடிக்கையாக அப்ளிக்கேஷனை அடைய விரிவுபடுத்தி ஒரு முழுமையான பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு முன்னதாக, ஃபேஸ்புக்கில் மெசஞ்சரை அறிமுகப்படுத்திய டெவலப்பர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழில்களுக்கு யூசர்களை நேரடியாக இணைக்க விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்திய மேம்படுத்துதல்படி, யூசர்கள் அப்பிள்கேஷனை எப்பொழுது திறந்தாலும், … Continue reading பேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம்


ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு

இனிமேல் யாரோ வடிவமைத்த வீடியோக்களை உங்கள் ப்ரொபைலில் பதிவேற்றி லைக்குகளும் ஷேர்களும் அள்ளுவது சுலபமாக இருக்காது. ஆம்! பலதரப்பட்ட மக்கள் பேஸ்புக்கில் நடக்கும் வீடியோ பைரசியைப்பற்றி முன் வைத்த விமர்சனங்களை அடுத்து ’video-matching tool’ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது ஃபேஸ்புக். இந்த கருவியின் மூலம் வீடியோவை வடிமைத்தவர்கள் தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி ரீ-போஸ்ட் செய்துள்ளார்களா என கண்காணிக்க முடியும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிடலாம். கடந்த ஜூன் மாதம் ஆகில்வி … Continue reading ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு


கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்

கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் … Continue reading கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்


வேலை வேண்டுமா? நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பலரது ஒருமித்த பதிலாக உள்ளது.அதே எதிர்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. உற்பத்தி துறைக்கும், தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால் அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் படித்து முடித்து வேலை தேடும் பட்டதாரிகளிடம் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்… * பாசிட்டிவ் எனர்ஜி: எந்தவொரு நிறுவனமும் நேர்காணலில் ‘ஆடிட்யூட்டுக்கு’ … Continue reading வேலை வேண்டுமா? நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?


மொபைல் போன் வாங்கும் முன்

மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். நாம், உடனே, நான்கைக் … Continue reading மொபைல் போன் வாங்கும் முன்


எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?

உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, … Continue reading எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?

கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது?

ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும். நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் … Continue reading கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது?

Latest Job Recruitment News 2015 date 6.9.2015

1) KELTRON Recruitment 2015 – Apply Online for 38 Technical & Non Technical Posts: Keltron Electro Ceramics Limited (KECL) has given a notification for the recruitment of 38 Technical (Senior Engineer, Assistant. Engineer, Engineer Trainee, Supervisor Trainee/ Technical Assistant Trainee, Operator, Operator Trainee) & Non Technical (Management Trainee) vacancies on regular basis. Eligible candidates may apply online … Continue reading Latest Job Recruitment News 2015 date 6.9.2015


பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்

கிறிப்டோவால் (CryptoWall) என்ற வைரஸ் மால்வேர் சென்ற ஆண்டிலிருந்து பரவி வருகிறது. இதனை பணயத் தொகை சாப்ட்வேர் (Ransomware) என அழைக்கின்றனர். மார்ச் மாத மத்தியில் தொடங்கி, இன்று ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, ஏறத்தாழ 6 லட்சம் கம்ப்யூட்டர்களை இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் கைப் பற்றி, 525 கோடி பைல்களை நாசம் செய்துள்ளது. Ransomware என்பது ஒரு வகையான கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர். இது ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். பின் … Continue reading பணயக் கைதிகளாகும் கம்ப்யூட்டர்கள்


Latest Recruitment News 2015 dt 3.9.2015

1) Airports Authority of India (AAI) Recruitment 2015 – 50 Junior Assistant Posts: Airports Authority of India (AAI) has released notification for the recruitment of 50 Junior Assistant (Fire Services) NE-4 vacancies at various airports in Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Tripura of North-Eastern Region. Eligible Domicile of Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland & Tripura … Continue reading Latest Recruitment News 2015 dt 3.9.2015

from WordPress http://ift.tt/1Uv9pOJ
http://ift.tt/eA8V8J via IFTTT

வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு சில புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களாவன, புதிய அப்டேட் மூலம் நீங்கள் படித்த மெசேஜ்களை படிக்கவில்லை என மாற்ற முடியும். இந்த அம்சம் மூலம் குறுந்தகவல் அனுப்பியவருக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியாது. அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் புதிய அப்டேட் மூலம் கஸ்டம் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் தனித்தனி ரிங்டோன்களை … Continue reading வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்!


விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு

கணினி பயன்படுத்துறீங்களா? அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க. இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே.  நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க. விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. … Continue reading விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு


உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது ??

முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் …. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் … netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய … Continue reading உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது ??


க்ளவ்ட் கம்ப்யூட்டர் : cloud computers

தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம். க்ளவ்ட் அறிமுகம்: Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக … Continue reading க்ளவ்ட் கம்ப்யூட்டர் : cloud computers http://ift.tt/eA8V8J Uncategorized

Tuesday, 3 February 2015

ஆதரவற்ற பிணங்களுக்கு ஆலங்குடி கணேசன்

குதிரைகளை வைத்து செய்யும் அஸ்வமேதே யாகம் செய்பவர்களுக்கு மிகவும் புண்ணியம் உண்டு .இப்படி ஆயிரம் அஸ்வமேதே யாகம் செய்வதற்கு இணயான புண்ணியம் ஒரு ஆதரவற்ற பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும்போது கிடைக்கும்...-காஞ்சி மகா சுவாமிகள்.

ஒரு ஆதரவற்ற பிணத்தை எடுத்து அடக்கம் செய்வதற்கே இவ்வளவு புண்ணியம் என்றால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்தவருக்கு எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கும்.


ஆனால் வாழ்க்கை போகிற போக்கில் அவர் இதைச்செய்கிறாரே தவிர புண்ணியத்தை எண்ணி செய்யவில்லை.

அவர்தான் ஆலங்குடி கணேசன்

சீவாத நரைத்த தலை காவிக்கறைபடிந்த பற்கள் பட்டன் போடாத அழுக்கான சிலுக்கு சட்டைக்கு சொந்தக்காரர்தான் ஆலங்குடி கணேசன்.

இப்போது 62 வயதாகும் கணேசன் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்து வருவது எல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்தான்.

குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்பிற்கு மேல்படிக்க முடியாதவர் பழைய இரும்புகளை வாங்கிவிற்கும் வியாபாரம் செய்வதை பழகி இன்றுவரை அதைத்தான் செய்துவருகிறார்.

42 வருடத்திற்கு முன் ஒரு சம்பவம்.

இறந்துபோன தனது கணவரின் பிணத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல வழியில்லாமல் ஒரு பெண் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரி முன் அழுது கொண்டிருந்தார்.

அந்தகாலகட்டத்தில் 108 கிடையாது, அந்த ஆஸ்பத்திரியில் அப்போது ஆம்புலன்சும் கிடையாது ஊரில் இரண்டே வாடகை கார்கள்தான் இருந்தன. பிணத்தை ஏற்றினால் பிறகு வேறுயாரும் அந்த காரில் பயணிக்கமாட்டார்கள் என்பதால் வாடகை கார்களும் பிணத்தை ஏற்ற வரவில்லை.

பிறகு கைவண்டியில் வைத்து அந்த பெண் தனது கணவரின் பிணத்தை கொண்டு செல்வதை பார்த்த கணேசன் அந்த கணமே முடிவு செய்தார், பிணத்தை ஏற்றி செல்வதற்காகவே ஒரு கார் வாங்குவது என்று.

கையில் இரும்பு வியாபாரத்திற்கு வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாயை வைத்து செகண்ட்ஹாண்ட் கார் வாங்கிதானே ஒட்டப் பழகிக்கொண்டார்.

''எனது கடையருகே காரை நிறுத்திவைத்திருப்பேன் அப்போது போன் எல்லாம் கிடையாது ஆஸ்பத்திரியில் இருந்தோ போலீஸ் நிலையத்தில் இருந்தோ தகவல் வந்தால் கடை வியபாரத்தை அப்படியே போட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போய் பிணத்தை வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு சம்பந்தபட்டவர்களின் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுவேன். அவர்கள் பார்த்து ஏதாவது டீசல் காசு என்று கொடுத்தால் வாங்கிக்கொள்வேன் இல்லாவிட்டால் திரும்பிவிடுவேன்.

இதைத்தாண்டி ஆஸ்பத்திரியில் இறந்துபோய் கேட்பாரற்று அனாதை பிணம் என்ற அடைமொழியோடு கிடக்கும் ஆதரவற்ற பிணத்தை எடுத்துக்கொண்டுபோய் நானே பிணத்தின் உறவாய் மாறி அடக்கம் செய்யஆரம்பித்தேன். கடந்த 44 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருப்பேன். இது போக அவசர பிரசவத்திற்கு மற்றும் விபத்தில் அடிபட்டவர்களுக்கு எல்லாம் இலவசமாக சென்றுவந்தேன்.

சாதாரண சிறிய ஒடுவேயப்பட்ட வாடகைவீட்டில்தான் குடியிருக்கிறேன். இதுவரை பல கார்கள் மாற்றிவிட்டாலும் இன்னமும் முதல்முதல் வாங்கிய 515 கார் எண்தான் எனக்கு அடைமொழியாகிவிட்டது, 515 கணேசன் என்றால் ஆலங்குடியில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது.

எனக்கு ஐந்து மகள்கள் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது ஐந்தாவது மகள் படித்துக்கொண்டு இருக்கிறார் வீட்டு விஷயத்தையும் என்னையும் சேர்த்து பார்த்துக்கொள்வது என் மணைவி தெய்வானைதான் 'நீ உன் மனசுக்கு பிடிச்சதை செஞ்சுகிட்டே இருய்யா' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்துபவர் அவர்தான்.

இப்போது எப்போது பிரசவதேதி என்று கேட்டு முந்தைய நாளே போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்கின்றனர். விபத்து மற்றும் இறந்தவர்களுக்கு உதவ 108 மற்றும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் இருக்கிறது, என் வண்டி ஆதரவற்றவர்களுக்காக மட்டும் ஒடிக்கொண்டிருக்கிறது. நான் ஒடும்வரை ஒடிக்கொண்டே இருக்கும்.

ஆலங்குடி கணேசனிடம் பேசுவதற்கான எண்:98656 71486.(வயது முதிர்வின் காரணமாக வார்த்தை தெளிவில்லாமல் இருப்பது போல தோன்றலாம் கொஞ்சம் பொறுமையாக பேசவேண்டும், மிஸ்டுகால் பார்த்து பேச தெரியாது ஆகவே அவருடன் பேசவேண்டும் என்று முடிவு செய்தால் திரும்ப திரும்ப முயற்சி செய்துதான் பேசவேண்டும். 

Thursday, 29 January 2015

குபேர வாசலைத் திறக்கும் குபேர இரகசியங்கள்

 
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!
மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.

முருக பெருமானின் விழாக்கள்

 

* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம் ஒளியாய் காணும் நாள் ..!!

தமிழக கோவில்களின் கோபுர உயரம்

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing