Showing posts with label #Gold #GoldRate #GoldPriceInIndia. Show all posts
Showing posts with label #Gold #GoldRate #GoldPriceInIndia. Show all posts

Thursday, 21 December 2017

தங்கத்தின் விலை கூடிய விரைவில் குறையும் நிலை

*தங்கத்தின் விலை கூடிய விரைவில் குறையும் நிலை.*

இன்னும் *தங்கத்தைப்  பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை.*

சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும் செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை நிலவரம் என்ன?
=============================
*ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது. ஆனால், சாமானியன் நகை வாங்கும் போது 6.5 தங்கம் + 1.5 செம்பு= இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள். இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு(தங்கமாக)+சேதாரம்செம்பு 1.5 =9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெரும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் சேர்த்து விட்டு அதனுடன் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டு விடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக்கடை காரர்கள். ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுன்னிகளாக உறிஞ்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குமிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? பவுனுக்கு 3கிராம் என்று வசுல் செய்யும்போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன? கணக்கு போட்டு பாருங்கள் மக்களே.* என்ன தலை சுத்துதா? எனக்குள் ஒரு ஆதங்கம். பல முறை மேடையில் பேசியிருக்கின்றேன். ஆனால், இந்த *விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.* நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே உங்கள் ஆதங்கத்தை காட்ட  அதிகப்படி சேர் செய்யவும். *எதுவும் மக்களால் முடியும்.*

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing