Thursday, 16 July 2015

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம்


உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்

ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.

(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின்
சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 
1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில்
வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற
மந்த்ரங்களை விட
உலகத்திலேயே சக்தி அதிகம்..

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4.ஜெர்மனியில் ஹாம்பர்க்
சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர்
வாழ உடலுக்கும் மனதுக்கும்
அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.

5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற
நாட்டில் தினமும்
மாலை ரேடியோ பரமரிபோவில்
பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம்
ரெண்டு வருஷத்துக்கும்
மேலே ஒலிபரப்பப்படுகிறதாம்.
இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த
நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.
இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன
தெரியும்?

2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால்
சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது .
அதற்கும் முன்னாலே பல ஆயிரம்
வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு
வந்தது என்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பல
நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு
மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில்
அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது.
தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம்
மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும்
இதற்கும்
சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்
க்கும் இது தேவையில்லை என்றும்
சொல்லப்பட்டது.

அந்த
காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும்
காயத்ரி மந்த்ரத்தின்
மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த
அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட
பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே.
காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த
மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே.
உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில்
எவ்வுயிர்க்கும் பொருந்தும்.

பல
வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில
புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த
ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர்
பிரபஞ்சத்தில்
சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற
மனம் கவரும் சப்தம்
கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம்.
வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம்.

அறிந்திருக்கலாம்.
தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி,
மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்
கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம்.
இது மனித குலத்திற்கு கிடைத்த
விலையில்லா பரிசு. சுத்தமான
இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம்
உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம்
தருகிறது.

'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும்
அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான
இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"
காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள்.
அது எவன் காதில்
விழுகிறதோ அவனே புனிதமாகிறான்.
ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம்
அல்லவா அது?.

காயத்ரி என்றால் என்ன? ''காய""
என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால்
அது செய்யும் மூன்று வேலை:
அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது,
பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.
வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம்
இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக
மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும்
மற்றொன்று அதி உன்னதமானது.
எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ்
வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த
காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும்
ஸ்கூல் வேன் .

காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப்
பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ்,
உள்ளே இருக்கும்ஓஜஸ்
வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24
அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின்
குரல் அது.

காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம்
போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க
வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர்
செய்வது வேதனையாக இருக்கிறது.
அது மனத்தை தொடவில்லை.
மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு,
ஒரு முறை இருக்கிறது.
அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க
குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல்
பலன். பழம் பழுக்கும்

மந்திரம் 
--------------
ஓம் பூர் புவஹ ஸ்வஹ 
தத்ஸவிதுர்வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ யோநஹ ப்ரசோதயாத்

அர்த்தத்தின் சுருக்கம்: 
------------------------------------
வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் தெய்வீகமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்.

மந்திரத்தின் அர்த்தம் 
-----------------------------------
இந்த மந்திரம் இருப்பதற்கான காரணத்தை "காயத்ரி" என்ற வார்த்தையே விளக்கி விடுகிறது. கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற்றொடரில் இருந்து வந்தது தான் "காயத்ரி". இந்த மந்திரத்தை ஓதுபவர்களை, மரணம் வரை அழைத்து செல்லும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும். இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தம்:

ஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள் 
பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்) 
புவஹ: துன்பங்களை அழிப்பவர் 
ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம் 
தத்: அது 
ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு 
வரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை 
பர்கோ: பாவங்களை அழிப்பவர் 
தேவஸ்ய: இறைதன்மை 
தீமஹி: உள்ளீர்த்துக் கொள்ளலாம்
தியோ: அறிவாற்றல் 
யோ:யார் 
நஹ: நாம் 
ப்ரசோதயாத்: ஊக்குவிக்கலாம்

மந்திரத்தின் மூலம் 
----------------------------
தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாக பல வருடங்களாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிலான சக்திகளே.

காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஏற்படும் பயன்கள் 
---------------------------------------------------------------------------
இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.

1. தடைகளை நீக்கும் 
2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் 
3. அறியாமையை போக்கும் 
4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும் 
5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் 
6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்
காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும்.
இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது - தேஜஸ் அல்லது சுடரொளி, யாஷஸ் அல்லது வெற்றி, வர்சாஸ் அல்லது அறிவாற்றல். காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட்புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும்.
அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆசி பெறுபவர்களுக்கும் கூட இந்த ஆற்றல்கள் பரவும். உங்கள் அறிவாற்றலை கூர்மையாக்கி, காலப்போக்கில் களங்கமடையும் நினைவாற்றலை தீட்டவும் காயத்ரி மந்திரம் உதவும்.
காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் தான் மொத்தமாக இருட்டாகவும் இருக்காது, அதே சமயம் மொத்தமாக வெளிச்சமாகவும் இருக்காது. இந்த தருணத்தில், மாற்றப்பட்ட உணர்ச்சி நிலைக்கு மனது நுழையும். மாற்றங்கள் அல்லது இயக்கத்தில் மாட்டிக்கொள்ளாமல், உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்நேரங்களில் நம் மனம் சுலபமாக குழம்பிவிடும். செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் எதிர்மறை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். அப்படி இல்லையென்றால் நேர்மறை சுடரொளியில் தியான நிலையை அடைவோம். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். இதனால் உங்களுக்கு அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.
காயந்திரி மந்திரம் மறைந்ததா?,
மறைக்கப் பட்டதா...? 
-----------------------------------------------------

காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால்
இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை
இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக்
கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது
அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத்
திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள்
சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின்
உடலையும் , உயிரையும் கவசம் போல
காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை
தத்துவம்.

இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக
கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை
தொடர்ந்து முறையாக ஜெபித்து
வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும்
அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த
தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும்
உள்ளது.

காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம்,
வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த
பாவங்களை அகற்றி பிரம்மத்தை
உணரவைக்கும் என்றும் கூறப்
படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான
பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை
கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி
உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும்
கூறுகின்றனர்.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக
இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான்
கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை
உணர்த்தும்.

இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி
மந்திரத்தை உலகுக்கு அளித்தவர்
விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே
(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர
சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத
மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து
எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி
என்ற பட்டம் பெற்றவர்.

விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி
மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில்
அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி
திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!
- திருமூலர் -

இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது.
பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள்
அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது
அப்படி இருக்க திருமூலர் சொல்லும்
காயத்திரி மந்திரம் வேதங்களில்
சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா?
அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான
காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா?
அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?

இந்த கருத்துக்கள்
அனைத்துமே கடுமையான விமர்சனம்
அல்லது விவாதங்களை உருவாக்க
கூடியவை. எனவே பதிவின் சாரத்தினை ஒரு
தகவல் பகிர்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டுகிறேன், பிழையிருப்பின் சுட்டிக்
காட்டினால் திருத்திக் கொள்ளவும்,
வருத்தங்களை தெரிவிக்கவும் தயாராக
இருக்கிறேன்.

பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை,
இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து,
கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள்
உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும்
சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர்.

ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு
மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.
விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும்
களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய
ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம்
தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப்
பட்டது.இன்றைய நமது தமிழும்,
கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின்
பாதிப்புகளின் எச்சம்தான்.

தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான
மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும்
பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம்
(சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற
சர்ச்சையான கருத்து உள்ளது. காலப்
போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப்
பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக்
கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட
நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி
நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும்
முகமாக சடங்குகள், வழிபாட்டு
முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை
தமிழர்களின் மீது திணித்தனர்.

இன்னும் தெளிவாக சொல்வதாயின்,
பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின்
வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து
வரிகளைத் தருகிறேன்....

“தமிழரிடத்திருந்த பல அரிய
விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர்
அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன
போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு
அவை வந்தன போலவும் காட்டினர்"

இது தொடர்பாக மேலதிக தகவல்
வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி,
சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல்
அறிஞரான Avram Noam Chomsky
ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம்.
இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள்
காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம்
அவற்றையெல்லாம் அலசுவதில்லை.

தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம்
செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி
மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் =
உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும்,
உடலையும் உயிரையும் பேணிக் காக்கும்
கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது.

இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு
அல்லது இனையான உச்சரிப்புகளைக்
கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும்
காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த
மந்திரம் காலம் காலமாக குருமுகமாக
மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது...
பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம்
மறைந்து போனதற்கு இதுவும் ஒரு
காரணமாக இருக்கலாம்.

பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி
மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது.
இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம்
என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி
மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"
இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது
புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி
மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும்
அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை
காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார்

"மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே
செய்யும்
கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
மவுனமேயென்று சொன்னார்
முன்னோரெல்லாம்
வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே"
- காகபுசுண்டர் -

இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு
பலனடைவது என்பதைப் பார்ப்போம்..
காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும்
மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும்
முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று
கொண்டோ, அல்லது பத்மாசனத்தில்
அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு
முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய
வேண்டும். உடலும்,உதடும் அசையாமல்
மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே
சிறப்பு.

இந்த மகா மந்திரத்தினை காலையிலும்,
மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர
ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு,
யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர்
நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும்
மாலையும் தொடர்ந்து செய்வதே
சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த
நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும்,
இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக
(உயிர்) இருந்து காக்கும் என்று
கூறியுள்ளனர் சித்தர்கள்.

காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா..?
இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூசாரிகள் பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா? அல்லது ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்கவே மாட்டோம். ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத மந்திரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு சக்தியும் வலுவும் கிட்டும். மனித மனத்தின் மீது பல்வேறு ஒலியும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். இலைகளுக்கு மத்தியில் வீசும் காற்றின் மென்மையான சத்தம் உங்கள் நரம்புகளை ஆற்றும். ஓடையில் ஓடும் நீரின் சத்தம் இதயத்தை வசியப்படுத்தும். இடிகளின் சத்தம் பயத்தை உண்டாக்கும்.
மந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் அதிக அளவில் உயர்ந்திடும். அது ஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கையில் நம் இலக்குகளை அடைய உதவிடும். நோய்களை குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும், செல்வத்தை பெறுக்கும், தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்கு நம்மை தள்ளும் சக்திகளை மந்திரங்கள் கொண்டுள்ளது.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சில தெய்வீக குணப்படுத்தும் சக்திகள் உள்ளது. இந்த மந்திரம் நம்முடைய மூன்று கட்ட உணர்ச்சிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் - விழித்திருத்தல், தூங்குதல், கனவு காணுதல். சரி, காயத்ரி மந்திரத்தின் அருமையான குணப்படுத்தும் சக்திகள் தான் என்னென்ன? இதோ தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து,
மற்றவர்களையும் உயர்த்திடுவோம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing