Wednesday 29 June 2016

தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை

மண் பாண்டத்தின் மகிமை
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக் கூடியது.
உணவில் சுவையைக் கூட்டக் கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.
உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.
மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது.
பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சம நிலைப் படுத்தும்.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப் படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும் போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக் கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன் படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகி விட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன் படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing