Saturday, 3 September 2016

பார்த்து சூதானமா இருங்க மக்கா

💥📞ஜியோ ஜீ பருக்கே...!📞💥

💥டுனிஷியா என்ற நாட்டிற்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்காக வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் பயணமாகிறார். முற்றிலும் வியாபார தந்திரங்கள் நிறைந்த அவர் அந்த நாட்டில் சென்றதும் தனக்கு கிடைத்த பெட்ரோல் பங்கு வேலையை கால் பங்கும் மீதி முக்கால் பங்கு நேரத்தில் அந்நாட்டின் சட்டத்தின் ஓட்டைகளை அறிந்து கொள்வதற்காக செலவிடுகிறார்.
ஒருகட்டத்தில் ஓட்டைகளையும் பாதாளங்களையும் கண்டறிந்த அவர் தான் வேலை செய்த ஊர் மக்களிடம் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட நாணயத்தை கொண்டு வருவீர்களேயானால் இருமடங்கு பணம் தருகிறேன் என்று உறுதியளிக்கிறார்.

அதாவது 5 ருபாய் நாணயத்திற்கு பத்து ருபாய் தந்து வாங்கி கொள்கிறார். அவ்வூர் மக்களோ இவன் ஒரு கிறுக்கன் என்று நினைத்துக்கொண்டு தங்களிடமிருந்த நாணயத்தையும், மேலும் அசலூர், பக்கத்தூர் என்று அனைத்து ஊர் மக்களும் தங்களிடம் இருந்த நாணயங்களை அவரிடம் விற்க துவங்குகின்றனர்.
அரசாங்கம் நாணய தட்டுப்பட்டால் திணறுகிறது. இதற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ள விசாரணைக்கு உத்தரவிடுகிறது. கடைசியில் அதிகாரிகள் இவரை கண்டுபிடித்து விடுகின்றனர்.

அவரை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றனர். நீதிபதிகளோ திணறி விடுகின்றனர் இவரை தண்டிக்க. காரணம், இவர் யாரையும் ஏமாற்றவில்லை, திருடவில்லை. மாறாக மக்களிடமிருந்து அதிக விலையில் தான் நாணயங்களை வாங்கியிருக்கிறார். சரி உன்னை தண்டிக்க மாட்டோம், எதற்காக இப்படி செய்தாய் என்று அவர்கள் கேட்க, அப்போது தான் குட்டை உடைக்கிறார்.

அந்த குறிப்பிட்ட நாணயத்தின் ஒரு பகுதி பிளாட்டினத்தில் அச்சிடப்பட்டவையாகும். அந்நாட்டின் முன்னாள் அரசரின் பிறந்தநாளையொட்டி அரசாங்கம் பிளாட்டினத்தில் குறிப்பிட்ட நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் இதை வெளியில் கூறினால் நாணயத்தை மக்கள் உருக்கி விற்று விடுவார்கள் என்று பயந்த அரசு மக்களிடம் இதை சொல்லாமலேயே புழக்கத்தில் விட்டு விடுகின்றனர்.

இதை மோப்பம் பிடித்த நமது வட இந்திய வியாபாரி அந்த நாணயங்களை தனதாக்கி உருக்கி அதை விற்று பணத்தை இந்தியாவுக்கும் அனுப்பி விட்டார்.

இப்போது தெரிகிறதா?

எதற்கு தேவையில்லாமல் அவர் சட்ட புத்தகங்களை புரட்டினார் என்று. நாணயங்களை உருக்கினால் சட்ட சிக்கல்கள் ஏதாவது வருமா என்றறியவே சட்ட புத்தகங்களை புரட்டி ஓட்டைகளை அறிந்து கொண்டார்.

நீதிமன்றம் அவரை தங்கள் அரசு செலவிலேயே நாட்டை விட்டு வெளியேற கெஞ்சி கேட்டுக்கொள்கிறது.

அவர் யார் தெரியுமா?

ஜியோவின் பாட்டனார் திருபாய் அம்பானி. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து திருடுவது எப்படி எனும் அதிபயங்கர வித்தையை உலகிற்கே அறிமுகப்படுத்திய அம்பானியின் நிறுவனம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால் அது பாம்பிற்கு பால் வார்ப்பது போன்றதுதான். என்றாவது ஒருநாள் நல்லது செய்த உங்களையும் சேர்த்தே கொத்தப்போகிறது.
இப்போது ஜியோ நடத்தும் கவர்ச்சிகளில் மயங்கி 4ஜி உபயோகிப்பதில் துவங்கி விட்டால் நாம் நினைத்தாலும் இன்டர்நெட் வேகம் எனும் மாயையிலிருந்து விடுபட முடியாது. 3ஜி உபயோகிப்பாளர்கள் 3ஜி டவர் கிடைக்காமல் விட்டாலே பைத்தியமாகி விடுவோம். இந்த லட்சணத்தில் இலவசமாகவே 4ஜி உபயோகித்து அதை பழவிடுவோமேயானால் இன்னும் சில காலத்தில் ரிலையன்ஸ் காரன் உங்களை அம்மணமாக்காமல் விடமாட்டான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சிகரெட், மது, மாது போன்றவை எவ்வளவு போதொயோ அதுபோலத்தான் இணைய வேகம் எனும் போதையும்.

பார்த்து சூதானமா இருங்க மக்கா....👍👍👍
Forward

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing