Sunday 13 November 2016

2014 ல் என்னை எதற்காக வாக்களித்தீர்கள்? ஊழலுக்கு எதிராகத்தானே?

மோடி ஜியின் கோவா உரையின் தமிழாக்கம்.
பனாஜி - கோவாவில் சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி அவர்கள் ரூபாய் நோட்டுகள் தடையை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடினார்.  இந்த தடையை எதிர்ப்பவர்கள் என்னை உயிரோடு இருக்க விட மாட்டார்கள். இது பற்றி நான் கவலைப்படவில்லை. உயிரையும் தியாகம் செய்ய தயார் என மோடி கூறினார்.
பாரதத்தை ஊழலிருந்து விடுவிக்க தன்னிடம் பல திட்டங்கள் இருப்பதாகவும், அதை செயல்படுத்த தனக்கு 50 நாட்கள் மட்டும் அவகாசம் தாருங்கள் தந்து ஒத்துழைப்பு அளியுங்கள்  என்று கோரினார் மோடி.  அப்படி ஒருவேளை தன்னால் செய்ய முடியவில்லையென்றால் எனக்கு தண்டனை கொடுங்கள் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், " சுதந்திரத்துக்கு பின்னர் நடந்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வருவேன்.  அதற்காக ஒரு லட்சம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமென்றால் அதையும் செய்வேன். இந்தியா  எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ அப்படிப்பட்ட இந்தியாவை உங்களுக்கு தர விரும்புகிறேன். 
பழைய அரசுகள் கருப்பு பணத்தை கண்டும் காணாமலும் இருந்தன.  நான் என்ன, யாரிடமிருந்தும் எதையாவது தட்டி பறித்தேனா?  நாங்கள் ஊழல் படிந்துள்ள இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவர நேர்மையான குடிமகன்களின் உதவியோடு இந்த மகத்துவப்பூரவமான முடிவை எடுத்திருக்கிறோம்.
பினாமி சொத்துக்களுக்கு எதிராகவும் சோதனைகளும், விசாரணைகளு மேற்கொள்ளப்படும் என்றார்.  ஊழல், கள்ளப்பணம் ஒளிப்பதற்காக சரியான நோக்கத்தோடு  எடுக்கப்பட்டுள்ள பெரிய முடிவாகும்.  ஒருவேளை இந்தியாவிலுருந்து பணத்தை கொள்ளையடித்து தேசத்துக்கு வெளியே எடுத்துச்சென்றிருதால், அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டியது எங்களுடைய கடமையாகும். 
தானாக முன் வந்து சட்டத்திற்கு புறம்பாக சேர்த்த  சொத்துக்களை கணக்கில் காட்டும் திட்டத்தில் முதன் முறையாக 67000 கோடி ரூபாய் கருப்பு பணம்   செலுத்தப்பட்டுள்ளது.  மொத்தத்தில் 125000 கோடி ருபாய் அரசாங்க கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 
ரூபாய் நோட்டுக்களை தடை செய்யவதற்கு தங்கள் அரசு ரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று கூறினார் மோடி.  புதிய ருபாய் நோட்டுகளை அடிப்பதற்கு 10 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு நவம்பர் 8ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டதாக மேலும் அவர் கூறினார். 
தன். உரையின் போது உணர்ச்சிவயப்பட்ட மோடி,  தான்  தன்னுடைய வீடு, சொந்தங்களை துறந்து தேசத்திற்காக தன்னை அர்பணித்துள்ளதாக கூறும்போது நா தழுதழுத்தது.  ஊழலற்ற பாரதத்தை நிர்மாணம் செய்ய நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார் பிரதமர் மோடி. 
மேலும் கூறுகையில் " இந்த கஷ்டங்கள் 50 நாட்களுக்கு மட்டுமே.  ஒருமுறை எல்லாவற்றையும் சுத்தப்படுத்திவிட்டால் ஒரு சிறிய கொசு கூட பறக்க முடியாது.  2 ஜி, நிலக்கரி இன்னும் பிற ஊழல்களை செய்தவர்கள் இன்று 4000 ரூபாய்க்கு க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. 
ஒரு தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, பொது ஜனங்களை வாக்கு அளிக்க வைக்க கிட்டத்தட்ட 3 மாதங்கள் அல்லது 90 நாட்கள் ஆகிறது.  அதற்காக கோடிக்கணக்கான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், அரசின் அணைத்து துறை அதிகாரிகளும், போலீஸ்,  எல்லை பாதுகாப்பு  படை,ரிசர்வ் போலீஸ் போன்ற பெருமளவு மக்களின் துணையோடு தான் இந்த செயல் சாத்தியமாகிறது.  ஆனால் நான் உங்களிடம் நாட்டை சுத்தப்படுத்த வெறும் 50 நாட்கள் மட்டும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.  நான் அடிமட்டத்திருந்து வந்தவன்.  எனக்கு ஏழை எளியவர்களின் கஷ்டங்களும், துயரங்களும் நன்றாக தெரியும்.  ஆனால் இந்த கஷ்டங்கள் வெறும் 50 நாட்களுக்கு மட்டும் என்று கூறிக்கொள்கிறேன்.  எனக்கு நேர்மையான மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.  அவர்கள் இந்த முயற்சியில் தோளோடு தோள் நிற்கிறார்கள். 
2014 ல் என்னை எதற்காக வாக்களித்தீர்கள்?  ஊழலுக்கு எதிராகத்தானே?  நான் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை
எடுப்பேன் என்று நம்பிக்கையோடுதானே?  அப்போ நான் அதை செய்ய வேண்டுமா இல்லையா?  அப்படி நான் நடவடிக்கை எடுத்தால் சிறு சிறு அசைவுகரியங்கள் வரும் என்று தெரியுமா இல்லையா?  அப்புறம் என்ன மக்களே... நேர்மையான மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது..
எனக்கு உங்கள் கரவொலிகள் மூலம் ஆசீர்வாதம் அளியுங்கள்.  உங்கள் ஆசீர்வாதம் இந்தியாவின் 125 கோடி மக்களின் ஆசீர்வாதமாக இருக்கட்டும்.  வலிமையான பாரதத்தை நிர்மாணிக்கும் புனிதப்பணியில் நாம் தொடர்ந்து பயணிப்போம்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing