எந்த புயல் வந்தாலும், அதற்கு ஒரு பெயருடன் தான் அழைக்கபடுகிறது. எவ்வாறு அப்படி பெயர் வைக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்கும் தோன்றும். ஆனால் பதில் தெரியாது.
இந்தியாவை பொறுத்தவரை புயலுக்கு பெயர் வைப்பது கடந்த 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.
அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் , இந்தியா தவிர, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன்,பாகிஸ்தான்,
தாய்லாந்து மற்றும்இலங்கைக்கும் வானிலை தொடர்பானமுன் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இதனை தொடர்ந்து, புயல் ஏற்படும் போது அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என அண்டை நாடுகளுடன் கலந்து ஆலோசித்து , 64 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த பெயர்கள், அழைப்பதற்கு சுலபமாகவும், சிறிய வார்த்தை கொண்டதாகவும் இருக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு புயலின் போதும், ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள இந்த புயல், பட்டியலில் உள்ள 45 ஆவது புயல் “ நடா “ ஆகும்.
இதனை தொடர்ந்து தற்போது தொடங்க உள்ள புயல் “வருடா புயல் “ 46 ஆவது புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment