Friday, 31 March 2017

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்.

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள்

அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி

"வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்

இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் எ கூறி மறைந்தான்

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர்

பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர்.

சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை.

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது.

இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது.

"வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது.

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை

சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி

ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்

ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல்

"குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்

சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்

இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான்.

குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.

நண்பர்களே! நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும்.

இதில் சீடன் தான் நாம்

குரு தான் நம் கடவுள்

ராஜநாகம் தான் நம் விதி.

Monday, 27 March 2017

மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்...

"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது..
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும் னு இருட்டா கருப்பா ஆயிடும்..  மேலும் இப்போது பார்ப்பதை போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும்.(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும் ... அது வீடோ பாலமோ... எல்லாமே மன்னால் பண்ணி வைத்தது போல பொல பொல வேண உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.(சும்மாவே நமூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது)

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் .. எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் ....அதாவது வாயு.
அதுவும் அது எப்படி பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் . எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவி யாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள் நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல.....
சூரியனில் உள்ள புறஊதா வை ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்க படாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைபதர்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிச மான அளவில் குறைந்து விடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும் ...ஹலோ நான் சொல்றது கேக்குதா....ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும் . (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான் .அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி.... ஐந்தே ஐந்து நொடி பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?
நிச்சயமாக முடியாது அல்லவா...
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....
அப்படி பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..

எனவே

"மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் "

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!

அரச மரத்தை வெட்டுவதோ அதன் மீது ஏறுவதோ பெரிய பாவம் என்று என் தகப்பனார் அடிக்கடி சொல்வார்.எதற்காக என்று காரணம் கேட்டால் அவருக்கு சொல்ல தெரியாது. பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.அதை ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் பின்பற்ற வேண்டியது நமது வேலை. அதை மட்டும் ஒழுங்காக செய்தால் எந்த பிரச்சனையும் வராது எனவே காரணம் கேட்காதே என்று கூறி விடுவார்...

என் தகப்பனார் அப்படி சொல்வது சரியா? தவறா? என்பதை பற்றி நான் கேட்கவில்லை. உண்மையாகவே அரச மரத்தை வெட்டினால் பாவம் ஏற்படுமா?. அதை மட்டும் தெளிவாக சொல்லுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சிவபெருமானுடைய வியர்வை துளியிலிருந்து தோன்றியது “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள் அதே போல நாராயணனின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரச மரம் என்ற ஐதீகம் காலகாலமாக இருந்து வருகிறது. மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் சிறப்பான முறையில் தனிப்பட்டு திகழ்வதற்கு இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களுமே இறைவனின் அம்சம் அல்லது இறைவனோடு ஏதாவது ஒரு வகையில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறுவதில்தான் அடங்கி இருக்கிறது.

மரம் என்பது ஒற்றை அறிவுடையது.அதை போய் இறைவனோடு சம்பந்தபடுத்தலாமா?. இது இறைவனை இழிவு படுத்துவதாக ஆகாதா? என்று சிலர் நினைக்கலாம். இதே மாதிரியான நினைப்புகள் மனித ஜாதியின் மனதில் எப்போது தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே இந்த உலகம் கெட்டுப் போக துவங்கி விட்டது எனலாம். மண்ணும் கல்லும் இறைவனாகுமா?.இது தவறான சென்டிமென்ட் என்று கருதியதனால் நிகழ்ந்தது என்ன?.

இந்த கேள்விக்கு நல்ல பதிலை தருவது சீன நாட்டின் இப்போதைய இயற்கை நிலவரமாகும்.

அங்கு தெய்வத்தோடு சம்பந்தபட்டிருந்த அனைத்தும் பொதுவுடைமை பெயரால் நாட்டு வளர்ச்சி என்ற போலிக் காரணங்களால் சூறையாடப்பட்டன.

அதன் விளைவாக சீனாவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு சமப்பாடு இழந்து, இன்று அபாயகரமான நிலைக்கு வந்து விட்டது.

நமது நாடும் இப்போது ஏறக்குறைய அதே பாதையை நோக்கி மிக வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.

வேப்ப மரத்தில் மாரியம்மன் இருப்பதும், வில்வ மரத்தில் சிவபெருமான் இருப்பதும், துளசியில் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கண்ணபெருமான் சிரிப்பதும், வெறும் புராணக்கதைகள் அல்ல. அதில் மிகு ஆழமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்கிறது. ஆயிரம் சட்டங்கள் ஏற்படுத்தாத ஒழுங்கை ஒரு சிறிய மத நம்பிக்கை ஏற்படுத்தி விடும் என்பதை போல கடவுளோடு சம்பந்தபடுத்தபட்ட மரங்களும் அழிவிலிருந்து தப்பித்து வந்தன.

இன்று பகுத்தறிவு வளர்ந்து போனதனால் வாழ்க்கைக்கு தேவையான அறிவு நசிந்து கொண்டே வருகிறது.

அரச மரத்திற்கு வடமொழியில் “அஸ்வத்தா” என்றொரு பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால் நம்பிக்கையோடு வழிபடுபவர்களின் பாவங்களை போக்குபவள் என்பது பொருளாகும். தமிழில் உள்ள “திருமுட்ட புராணம்” என்ற நூல் அரசமரத்தை வெட்டுவதனால் துர்மரணம் வறுமை தீராத பிணி போன்றவைகள் ஏற்படுவதாக கூறி எச்சரிக்கை செய்கிறது.

மரங்கள் என்பது பூமியின் இடப்பரப்பை அடைத்துக்கொள்ள படைக்கப்பட்ட தேவையற்ற பொருள் அல்ல. மரம் என்பது பூமிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர் வாழ கொடுக்கப்பட்ட கொடையும் ஆகும். அந்த மரங்களை அழித்தால் கண்டிப்பாக மனிதர்கள் அழிய வேண்டியதுதான்.

அதனால்தான் நமது பெரியவர்கள் அரச மரத்தை வெட்டினாலும் அவ மரியாதை செய்தாலும் பாவம் என்று சொன்னார்கள்.

Sunday, 26 March 2017

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம்

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் !

“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்குதுல, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.

1.ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும்.

2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும்.

3.சுவிஸியில் 5வருடமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.

உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி மற்றும் குட்டிப்பாப்பா இருந்தால் அந்த குடும்பத்திற்கு “அடிப்படை” ஊதியமாக மாதம் 3,95,000 அரசாங்கம் வழங்கும்.( சிவாஜில ரஜினி சொல்ற மாதிரி அவங்க ‘சும்மா இருந்தா மட்டும் போதும்’)

இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்களிப்பை அரசாங்கம் நடத்தியது, அந்த வாக்களிப்பின் முடிவு உலகையே மற்றோரு முறை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

5யில் 4ங்கு பேர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.78% சதவீதம் பேர் “சுவிஸ்” அரசின் ‘அடிப்படை’ ஊதியம் எங்களுக்கு வேண்டாம் என்று தங்கள் முடிவை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுக்கும் அவர்கள் சொல்லும் காரணம் இன்னமும்
வியப்பாகவுள்ளது.

1.இந்த அறிவியப்பை கேட்டு , இன்னும் சில வருடங்களில் கோடி கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் சட்டரீதியாகவும்,சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.

2.இந்த அடிப்படை ஊதிய சட்டம் எங்களையும் எங்கள் சன்னதியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.

3.அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.

இது சரித்திரத்தில் எழுதவேண்டிய நாள், ஸ்விஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.

நாம் இன்னமும் தமிழ், சோழர்கள், திருக்குறள், சித்தர்கள் என்று பழையபெருமையை வெட்கமில்லாமல் பாடிக்கொண்டு கிடைக்கும் 1000,2000 ரூபாய்க்கும் சொல்ற கட்சிக்கு கண்ண மூடிக்கொண்டு ‘ஓட்ட’ப் போட்டுட்டு, இலவசமா ‘பினாயில்’ குடுத்தா கூட போட்டிப்போட்டு வாங்கி குடிக்கிறோம்.

இதுல எதுக்கு எடுத்தாலும் ஒரு பஞ்ச் டயலாக் வேற “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி”னு அநேகமா இந்த வரியை உச்சரிக்கும் கடைசி சந்ததி நாமகத்தான் இருக்கும், நம் அடுத்த சந்ததி நம்மை நினைத்து  நிச்சயம் பெருமைபட மாட்டாங்க.

நம்மைப் போல் சுவிஸ் நாட்டிற்கென்று பலபெரும் பெருமை இல்லாமல் இருந்து இருக்கலாம், ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர் காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்காலப் பெருமையை.

வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே..!!

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்

பெண்களை நேசியுங்கள்
**********************************
Osho......

இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.

பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.

உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.
அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.

கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.

ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.

அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.

அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.

மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.

ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.

பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.

இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing