Tuesday 18 December 2018

நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருந்து. எந்த மருந்து கடையிலும் கிடைக்காத மருந்து

மார்கழி மாதம் என்றாலே ,  என்னுடைய 15 வயது ஞாபகம் தான் எனக்கு வரும்..

மார்கழி 30 நாளும் ,
விடியற் காலையில் பஜனை. 

கோவிலில் புறப்பட்டு, 
6 மணி நேரம் வீதி பஜனை.....

தாளம், தபேலா, மிருதங்கம்,
ஒரே கொண்டாட்டம் தான்.

ஒருவருக்கு , இந்தப் பக்கம் ஒரு துப்பட்டி, அந்த பக்கம் ஒரு துபட்டி,....

சிலருக்கு , கண் மட்டும் தான் தெரியும். மீதி துப்பட்டியில் மறைந்திருக்கும்.

ஒரு சிலர் , குடு ,குடுப்பனை போல் , உடல் முழுக்க துணி..

பல விதங்களில் தலையில் முண்டாசு.. ( பனியை சமாளிக்க )

இதில் , பாதி நபர்களுக்கு தும்பல், ஜலுப்பு ....தான்.
( ஒரு வருடம் நம் மண்டையில், மார்பில் உள்ள சளி எல்லாம் போயே பேச்சு. )........

எப்படியும் , என்ன ஆனாலும்,
பஜனை  மட்டும் நிற்காது. தினந்தோறும்.

பஜனை , கோவிலில் ஆரம்பித்து , கோவிலில் முடிவடையும்,
முடிந்ததும், கோவில் சன்னதியில், 
பஜனையில் கலந்து கொண்டவர், கலந்து கொள்ளாத  பக்தர்கள் , யாவருக்கும் கொடுக்கும்

அருமையான மருந்து,
அற்புதமான மருந்து.

நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருந்து. எந்த மருந்து கடையிலும் கிடைக்காத மருந்து.
மருத்துவ வினியோகம்...

சூடான ஆவி பறக்கும் , வெண் பொங்கல். ...
அதில் சேர்க்கும் மருந்து பொருள்கள்.

இந்த மார்கழி மாதத்தில்

1. பனியால் நம் தோல் சுருங்கி     வரண்டு , சுரண்டினால் , கோடு, கோடாக காணப்படும். அதை சரிசெய்ய .....நம் தோலுக்காக, பச்சை பயிறு, ...

2. நம் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ( பனியில் சென்று வெளியேறிய மீதீ ) அழுக்கையும் ( சளி ) அகற்ற அருமையான ஒன்று ....,.மிளகு ......

3.பனியில் நம் உடலில் , உள்ள உறுப்புக்கள் ஒரே சீராக இருக்க..... சீர் + அகம் = சீரகம்

4.பனியால்  நம் உடலில் சற்றே கொழுப்பு குறையலாம். அதை சரி செய்ய ......நெய் ......

5. பனியால் நம் உடல் சற்றே , பலகீனம் ஆகலாம்.  அதை சரி செய்ய  ........முந்திரி பருப்பு .....

6. பனியால் நம் உடலில் கெட்ட நீர் சேரலாம்.  அதை போக்க ........இஞ்சி....

ஆக இந்த மார்கழி மாதம் முழுக்க,  எல்லோர் வீட்டிலும் பெருமாளுக்கு வென்பொங்கல் தான் ,

காலை பொழுதில் , முக்கிய பிரசாதம்.

வெண் பொங்கல் தான்.

சர்க்கரை பொங்களோ, மற்ற பிரசாசங்களுக்கு இடமே கிடையாது.

( நம் முன்னோர்களின் அறிவும், உடல் வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதத்தில்  ஓசோன் படலத்தில் கிடைக்கும் சக்தியை பயன்படுத்தி, பிரசாதம் என்ற முறையில் வெண் பொங்களையும் கொடுத்து நம்  உடம்பை சுத்தம் செய்யும் விதமும்... என்ன ஒரு அறிவியல்....

இப்போது ......இதெல்லாம், முட்டாள் தனம். டாக்டரிடம் செல்வது தன் , புத்திசாலித்தனமாக மாறி பேச்சு......

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing