Tuesday, 22 October 2019

இப்பதான் நாம சரியான ஆயுதத்த கைல எடுத்திருக்கோம்

ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கிக்கு கொடுக்கப்பட்ட, நான்கு கப்பல் கட்டும் ஒப்பந்தங்களை ரத்து செய்தது இந்தியா.

இதே காரணத்துக்காக மலேசியாலிருந்து பாமாயில் இறக்குமதியையும், ரத்து செய்தது இந்தியா.

இது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. 'நாங்க உலகத்தோட மிகப்பெரிய மார்க்கெட். எங்ககூட வியாபாரம் செய்யணும்னா, எங்க எதிரிங்ககூட சகவாசம் வெச்சுக்கக் கூடாது. இதுதான் எங்க டிமான்ட்'.

இதுதான் அந்த எச்சரிக்கை. இது நமக்கு சர்வாதிகாரத்தனமா, புதுசா தெரியலாம். ஆனா காலாகாலமா வல்லரசுகள் இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. நாமதான் ஒருகாலத்துல முட்டாள்தனமா... நம்ம உள்நாட்டு கம்பனிகள அழிச்சு, பாகிஸ்தானுக்கு நிதி உதவி செஞ்ச அமெரிக்ககாரனோட கம்பனிகள வளர்த்துவிட்டுகிட்டு திரிஞ்சோம்.  

இதுதான்... கத்தியில்லாத, ரத்தமில்லாத பொருளாதாரப் போர். 'சந்தை என் கைலிருக்கு. பொருள் கொண்டுவந்து விற்க ஆயிரம்பேர் காத்திருக்கான். உனக்குதான் என்னோட சந்தை தேவை. அதனால நான் சொல்றத நீ கேட்டே ஆகணும். இல்லையா, என்னோட சந்தைல நீ கீரை வித்த இடத்தைப் பிடிக்க, வரிசைகட்டி ஆயிரம்பேர் காத்திருக்கான். மூட்டைய கட்டிட்டு நீ கிளம்பு'.

இப்பதான் நாம சரியான ஆயுதத்த கைல எடுத்திருக்கோம். இந்த ஆயுதத்துக்கு அடங்காதவன் எவனுமே கிடையாது !!! 😴😴😴

வாழ்க பாரதம்.....ஜெய்ஹிந்த்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing