Sunday, 31 May 2020

* #கிஸான்_கடன்_அட்டை யைப் பெறுவது எப்படி*?



*நான் படித்த தகவலின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன் இதில் தவறேதும் இருந்தால் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்*.
உங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்.

தகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நிலம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.

பணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.

*கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன*?

பணப் பட்டுவாடா நடைமுறைகளை எளிமைப்படுத்துகிறது.

பணம் மற்றும் பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

ஓவ்வொரு பயிருக்கும் தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது.

விதைகளையும் உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக்கேற்ற வகையில் வாங்கிக்கொள்ளலாம்.

வாங்கும்போதே முகவர்களிடமிருந்து தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று வருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை.

விவசாய வருமானம் அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு.

கடன் வரம்பை பொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.

பணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே.

விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம்.

விவசாய கடனுக்கு வழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்.

*விவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்*

விவசாயக்  கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

நோக்கம்: விபத்துக்ளா ல் உண்டாகும்  (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

பயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்

இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்.

விபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.

நிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில்  ரூ.50,000/- .

இரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-

ஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.

*இழப்பீட்டு தொகை பெறும் முறை*:

இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களின் நிர்வாக முறைகள் செயல்படுத்துகின்றன.

*மாஸ்டர் பாலிஸியின் காலம்:3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது*.

காப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்
பிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை  நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்.

செயல்படும் வழிமுறை:  இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. தமிழ்நாடு சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .
விவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.

Tuesday, 12 May 2020

#காவல்துறை சார்பில் அருமையான #எச்சரிக்கை

*காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை..* 👌👌👌👌

*முன் எச்சரிக்கை செய்தி*

*வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக*

*பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள்*

*குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.*

 1. *மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.*

 2. *விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.*

 3. *விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.*

 4. *உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம்.  மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.*

 5.  *அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.*

 6. *தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.*

 7.  *நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.*

 8. *உங்கள்  மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்*

 9.  *வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.*

 10.  *குழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.*

 11.  *வீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்*
.
 12.  *நீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.*

 13.  *எப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்*
.
 14.  *மக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்*
.
 15.  *பொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *.  அடையாளம் காண்பது கடினம்.*

 16.  *வண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

 17. *அரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்*
.
 18. *நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்*
.
 19.  *உங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள்.  வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.*

 20  *குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை விட்டு அழைத்துச் செல்லலாம்.*

 21. *உங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.*

 *இது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை  மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.*

Friday, 8 May 2020

தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா?

மூன்று  மாதங்களில் சுமார் 25  ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்.

அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை.

100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.

மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

அப்படியென்றால் 25 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே..?

ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

எங்கே போனார்கள் அத்தனை பேரும்... ???

ஆக, 25 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.

அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.

அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா"...????

#STAY_INDOOR , #STAY_SAFE

*Covid 19 Spreading up Quickly In India*

March 05.         30  Cases
March15.         114 Cases
March 25.        657 Cases
March 31.      1397Cases
April 05.          4289 Cases
April 10.         7600. Cases
April 20.        18539 Cases
April 30.        34863 Cases
May 05.        49400. Aprox

With this speed it will be
70000.   Up to May 10th
140000.  Up to May 20th
3 lakh up to end of this month

*VERY IMPORTANT*
 
Please Do not leave home to buy anything, because the worst time is starting.

As per studies 
The horrible thing that happened in Italy was that this *CONTAGIOUS WEEK* which was ignored there and so thousands of cases came up together.

*HUMBLE REQUEST*
DON'T VISIT ANYONE  DON'T MEET ANYONE, DON'T EVEN VISIT CLOSE FAMILY
AS THIS IS NOT ONLY FOR YOUR SAFETY BUT YOUR LOVED ONES TOO.
AS
This time you will be at the PEAK STAGE OF TRANSITION.
PLEASE 
*Send this message to all your relatives and friends*

🙏🏻🙏🏻
*JAIHIND*
*STAY INDOOR*STAY SAFE*

Tuesday, 5 May 2020

this is how Modi ji and PMO is working 24x7 to help and facilitate resources to all states in India

Naveen Pattanaik :Namaste Modi Ji, my apologies for calling you at 12.15 midnight. I was expecting Corona testing kits by tomorrow but some logistic issues arised and trucks carrying those kits are stuck in Mumbai now. We need them urgently.

- I can understand. Please don't worry, I will personally see to it and ensure it reaches your state capital sooner.

- Thanks. But I need it by today morning, anyhow!

- Do you mean within next 6 hours? 😳

- Yes, I insist, even before the sun rises today. Please get either Mumbai, Pune or Nashik Airport opened for us, ask Air Force to get us one flight and we will airlift the kits to Bhubaneswar. Please don't let me down. Good night.

Soon after this phone call last night, PM's office went busy to make it happen. When one CM is willing to serve his people at any cost, the PMO can't let him down. Many calls were made, orders were typed and then faxed to various officials and establishments. Arrangements were being made in a great hurry.

And guess what - Nashik airport was temporarily reopened in the midnight to make an Air Force flight land, load testing kits and fly to Bhubaneswar. The flight delivered the kits in Bhubaneswar Airport and then took off to Air Force base.

When the sun was rising in Odisha today, many government vehicles were already on roads, driving to different destinations carrying those kits.

That's how Naveen Patnaik is working to protect his state people from Covid19.

And this is how Modi ji and PMO is working 24x7 to help and facilitate resources to all states in India.🙏🙏

Monday, 4 May 2020

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்

இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும்சரி...
கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி.....
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி தளராவிட்டாலும் சரி.....
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி தடுக்காவிட்டாலும் சரி...
அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி...
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும். அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும். 

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.
லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்...... 
கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்..... 
எச்சில் துப்பாதீர்கள்.....
கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....
கும்பல் கூடுவதை தவிருங்கள்.......
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம். 

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்... வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும். அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும். 

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க  மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்.. 

வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing