Sunday, 29 December 2013

அக்னி ஹோத்திரம்..!

அக்னி ஹோத்திரம்

“ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்”

(எந்தஒளி நம் அறியாமை என்னும் இருளைப்போக்கி நம் அறிவுச்சுடரை தூண்டுகிறதோ அந்த மேலான ஒளியை தியானிப்போமாக!)


இன்றைய உலகில் மனிதன் மனஅழுத்தத்தாலும் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகளால் துன்பப்படுகிறான். நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் மாசுபட்டுவிட்டது. மனிதன் விஷக்காற்றை சுவாசித்து நோய்களால் வாடுகிறான். காற்று அந்த அளவுக்கு மாசுபட்டுவிட்டது. இந்த மாசுக்களை நீக்கவும், நாம்இந்த பூமியில் பிறந்ததால் ஏற்பட்ட பிறவிக்கடனை தீர்க்கவும், பஞ்சபூதங்களுக்கும் முழுமையான பிரதி உபகாரம் செய்யவும் நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமைதான் அக்னிஹோத்திரம் எனும் எளிய வேள்வியாகும். இவ்வேள்வியின் போது எழும் புகையானது நோய்களைக் குணமாக்கி, மனதை செம்மைப்படுத்துகிறது. சுற்றுச்சூழலை முற்றிலும் தூய்மையாக்குகிறது. தாவரங்களைச் செழிப்பாக வளரச்செய்கிறது. நோய்களுக்கு அக்னிஹோத்திர சாம்பல் மருந்தாக பயன்படும். நீரில் இச்சாம்பலைக் கலந்தால் நீர் சுத்தமாகிவிடும். எனவே இந்த அற்புத வேள்வியை தினமும் செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

செய்முறை – (தேவையான பொருட்கள்)
சரியான அளவில் செய்யப்பட்ட செப்பு பிரமிடுவடிவ பாத்திரம். (semi copper pyramid pot) பசு நெய் வைக்கக் கிண்ணம், நெய் ஊற்றும் கரண்டி, பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டு.

சுத்தமான பசுவறட்டி - பசுவறட்டி பசுமாட்டின் தனி சாணத்தில் இருந்து தயாரிக்கவேண்டும். வேறு எதுவும் சாணத்தில் கலக்கக்கூடாது.
பசுநெய் - பசுநெய் மிகவும் தூயதாக இருக்கவேண்டும்.
முழுப்பச்சரிசி - கல், குருணை நீக்கப்பட்டு முனைமுறியாமல் முழு அரிசியாக இருக்கவேண்டும். செந்நிறமுள்ள சிவப்பு அரிசி (brownrice) சிறந்தது.
அக்னிஹோத்ரா வேள்வி தினமும் காலை ஸுர்யஉதய, அஸ்தமன வேளையில் செய்யவேண்டும்.
எளியசெய்முறை விளக்கம்:

அக்னிஹோத்ர பாத்திரத்தில் முறையாகப் பசுஞ்சாண வறட்டியை அடுக்கி அக்னியை வளர்க்க வேண்டும். பின்பு சரியான ஸீர்ய உதய நேரம் வந்தவுடன் கீழக்கண்ட மந்திரத்தைக் கூறி நெய் கலந்த அரிசியை அக்னியில் இடவேண்டும்.

காலை ஸீர்ய உதய மந்திரம்:

ஸீர்யாய ஸ்வாஹா ஸீர்யாய இதம் நமம! (ஒருபாகம் நெய்கலந்த அரிசியை அக்னியில் போடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம!

மாலைஸீர்ய அஸ்தமன நேரத்தில்:

அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
அக்னி ஜ்வாலை தானாக அணைந்தவுடன் சிறிது நெய்யை அவிசுகளின் மீதுவிட்டு ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ கூறி வேள்வியை முடித்துவிடலாம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பஹம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷிய மாம்ருதாத்!
(காலை, மாலை இரண்டுக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் பொதுவானது)

வேள்வியை செய்தவுடன் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராத்தனைகள் செய்யலாம். நம்முடைய வாழ்க்கை தேவைகள், காரியத்தடைகள் எல்லாவற்றையும் அக்னிமுன்பு சமர்ப்பணம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் காரியத்தில் வெற்றியும் பெறலாம். அக்னிபரிசுத்தத்தின் அடையாளம். உன்னதமான தூதுவன். எனவே எல்லாக்காரியங்களுக்கும் வெற்றி கிடைப்பது உறுதி.

வேள்வியை நிறைவுசெய்த பின்னர் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே 3 மணிநேரம் வைத்துவிட வேண்டும். இதனால் தொடர்ந்து சூரியன், அண்டவெளியில் இருந்து காஸ்மிக் எனர்ஜி (cosmic energy) நிறைய கவர்ந்து இழுக்கப்படுகிறது. மிகச்சிறந்த ஆற்றல்தளம் அதைச்சுற்றிப் பரவுகிறது. வேள்விபாத்திரத்தைச் சுற்றி மற்றவர்களும், நோயாளிகளும் உட்கார்ந்து வேள்விப்புகையை நன்கு சுவாசிக்க நோய்கள் விரைந்து குணமாகும் நோய்எதிர்ப்புச்சக்தி அதிரிக்கும். சக்கரங்கள் தூண்டப்பட்டு மனஅமைதி உருவாகும்.
முனிவர்களும், ரிஷிகளும் தினந்தோறும் தங்கள் முதற்கடமையாக அக்னிவேள்வியை மேற்கொண்டனர். அக்னிஹோத்ரா வேள்வி சுற்றுப்புறத்தில் பெரும்மாற்றத்தை உருவாக்கி அமைதி நிலையை ஏற்படுத்துகிறது. பரிசுத்தமான சூழல் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் சக்கரங்களும், சுசும்பநாடி உட்பட எல்லா நாடிகளும் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் நாம் தெளிந்த சிந்தனையும், ஆழ்மனசக்தியையும் முழுமையாகப் பயன்படுத்தமுடியும். இத்தகைய அக்னிவேள்வி மூலமே முனிவர்களும், ரிஷிகளும் யோகம், தியானம், மந்திரங்கள் போன்றவற்றை ஞானதிருஷ்டி மூலம் உணர்ந்து உருவாக்கிவைத்தனர். தம்மைச்சுற்றியும், சுற்றுப்புறத்திலும் சக்திதளத்தை உருவாக்கினர். இதற்கு அக்னிவேள்வி தூண்டுகோலாகச் செயல்படுகிறது. இன்று சாதாரண மனிதன் இதை தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் எல்லாவகையிலும் பயன்பெறமுடியும்! இன்றைய விஞ்ஞான யுகத்தில் மனிதனுக்கு பிரச்சனைகள், வாழ்க்கைத்தேவைகள், காரியத்தடைகள், துன்பமும், வறுமையும் பெரும் சுமையாகிவருகிறது. இவற்றையெல்லாம் போக்கி அமைதியாகவும், எல்லாவளங்களும் பெற்று வாழ்வதற்கு ஒரே வழி அக்னிஹோத்ரா மட்டுமே! சிறந்த தீர்வாகும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing