Tuesday 24 June 2014

உலக உதை பந்தாட்ட சாம்பியன் கிரிஸ்டியானோ ரொனால்டோ பற்றி ஒரு சிறப்புத் தகவல்

உலக உதை பந்தாட்ட சாம்பியன் கிரிஸ்டியானோ ரொனால்டோ பற்றி  ஒரு சிறப்புத் தகவல் :

ரொனால்டோவின் சாதனைகளைப் பற்றிய ஒரு பேட்டியின் போது, "எனது அனைத்து 

வெற்றிக்குமே காரணமானவன் என் பழைய நண்பன் 'அல்பேர்ட் ஃபாண்ட்ரா‘ (Albert Fantrau) தான்என்று வெளிப்படையாக ஒரு அறிக்கையை ரொனால்டோ வெளிப்படுத்தினார். பேட்டியெடுத்தவர்களுக்கோ ஆச்சரியம். இதுவரை கேள்வியே பட்டிராத பெயர் அது. அதை விவரிக்கும்படி ரொனால்டோவிடம் கேட்டுக் கொண்டனர். அவர் சொன்னது இதுதான்.

. "
நானும், என் நண்பன் அல்பேர்ட்டும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட டீமில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், 'Sporting Lisbon’ ஐச் சேர்ந்த மனேஜர் எங்கள் டீமைப் பார்வையிட வந்திருந்தார். அத்துடன் அவர் திறமையான ஒரு விளையாட்டு வீரனையும் தெரிவு செய்ய இருந்தார். அப்போது நடைபெற்ற உதைபந்தாட்டப் பயிற்சி விளையாட்டில், யார் அதிக கோல்களைப் போடுகின்றனரோ, அவர்களையே தெரிவு செய்யப் போவவதாகவும் அவர் சொன்னார். விளையாட்டு ஆரம்பமாகி முதல் கோலை (Goal) நானும், அடுத்த கோலை அல்பேர்ட்டும் போட்டோம். விளையாட்டு முடியும் நேரம் வந்த இறுதிக் கட்டத்தில், அல்பேர்ட்ட்டுக்கு ஒரு கோலை அடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவன் அதை அடிக்கவில்லை. அந்தப் பந்தை என்னிடம் தட்டிவிட்டான். அந்தக் கோலை நானே அடித்தேன். உலகப் பிரசித்தமாகப் போகும் ஒரு சந்தர்ப்பத்தை அவன் எனக்குத் தந்தது பெரிய விசயம். அவனிடம், 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று கேட்டேன். அவன் சொன்னான், 'இதற்குத் தகுதியானவன் நீதான்' என்று. இன்று நான் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டு வீரனாக இருக்கிறேன். ஆனால், அவனோ இது எதுவுமில்லாமல் அனைத்தையும் நண்பனுக்காக இழந்து தியாகியாக நிற்கிறான் 

கிரிஸ்டியானோ சொன்னவற்றைக் கேட்ட நிருபர்கள் ஆச்சரியத்தின் உச்சத்துக்குப் போனார்கள். 'ஒருவன் இந்த அளவுக்கு உச்சிக்குப் போனாலும், இப்படி உண்மையைப் போட்டு உடைப்பானா?' என்று நினைத்தார்கள். அல்பேர்ட் வசிக்கும் இடம் நோக்கிச் சென்றார்கள். நடந்த உண்மை பற்றி விசாரித்தார்கள். அவையெல்லாம் உண்மைதான் என்று அல்பேர்ட்டும் ஒத்துக் கொண்டார்.


.
அந்த நேரத்தில்தான் நிருபர்களுக்கு ஒரு விசயம் நெருடியது. "அனைத்தையும் இழந்து நீங்கள் நிற்பதாக கிரிஸ்டியானோ சொன்னாரே! ஆனால், நீங்கள் கோடீஸ்வரர்கள் வாழும் ஒரு வில்லாவில், கார்கள், வசதிகளென, அனைத்தையும் சொந்தமாக்கி, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறீர்களே! அது எப்படி?“ என்று கேட்டார்கள்.

.
அதற்கு அல்பேர்ட் சொன்ன பதில், 'இவையெல்லாம் என் ஆருயிர் நண்பன் கிரிஸ்டியானோ கொடுத்தது

.
வாழ்த்துகள் கிரிஸ்டியானோ ரொனால்டோ! 

via:
ராஜ்சிவா


No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing