Monday, 25 August 2014

அனைவருக்கும் வங்கிக்கணக்கு; பிரதமர் திட்டம்


அனைவருக்கும் வங்கிக்கணக்கு வசதி அளிக்கவும், இந்த வங்கிக்கணக்கிற்கு டெபிட் கார்டு மற்றும் விபத்து காப்பீடு வசதி அளிக்கும் வகையில் செயல்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இது தொடர்பாக, அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் இமெயில் அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

சிறப்பு வசதிகள்:
---------------------------
=> பணம் பாதுகாப்பாக இருக்கும்.
=> டெபிட் கார்டு மூலம் எந்த ஏ.டி.எம் -லும் பணம் எடுக்கலாம் .
=> ரூ 1 லட்சம் வரை விபத்து காப்ப்பீடு .
இது தவிர மற்ற வசதிகள் :
-----------------------------------------------
=> இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக பணம் அனுப்பலாம் .
=> நீங்கள் அரசாங்க திட்டங்களை பெறும் தகுதி உள்ளவராக இருந்தால் அந்த தொகையை உங்கள் கணக்கில் நேரடியாகப் பெறலாம்
.=>ஆறு மாதங்களுக்கு கணக்கை திருப்திகரமாக நடத்திய பிறகு ஓவர் டிராப்ட் வசதி ..
=>பென்சன் , காப்பீடு போன்றவை ..
வங்கிக் கணக்கு துவங்க தேவைப்படும் ஆவணங்கள் :
--------------------------------------------------------------------------------------------
ஆதார் கார்டு அல்லது ஆதார் எண் இருந்தால் வேறு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை .
உங்களிடம் ஆதார் கார்டு அல்லது ஆதார் எண் இருந்தால் வேறு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை
உங்களின் முகவரி மாறி இருந்தால் உங்களின் தற்போதைய முகவரிக்கான ஒரு சான்று தேவை .
இல்லை என்றால் இவற்றில் ஓன்று (அடையாளத்திற்காக )-
அங்கீகாரம் பெற்ற அமைப்பின் அத்தாட்சிக் கடிதம் , நகேரா மூலம்
வழங்கப்பட்ட ஜாப் கார்டு , மற்றும் இவற்றில் ஓன்று (முகவரிக்காக ) -மின்சார அல்லது தொலைப்பேசி பில் ,பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்.
கணக்குகளை துவக்கிட வங்கிகளால் நடத்தப்படும் பல கேம்ப்-களில் ஆதார் கார்டு இல்லாதவர்களுக்காக , ஆதார் கார்டு வழங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது .உங்கள் வங்கி கணக்கை துவக்கிட , தயவு செய்து அருகிலுள்ள வங்கி கிளையை , முகாமை அல்லது பாங்க் மித்ரு-ஐ
(பிசினஸ் கரெஸ்பாண்டென்ட்) தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் .
கணக்கு துவங்குவதற்கான சிறப்பு முகாம் :
-------------------------------------------------------------------------
2014 ஆகஸ்ட் 28 -ஆம் தேதி இந்த திட்டத்தை துவக்கும் அடையாளமாக ,வங்கிகளால் ஏராளமான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதே பகுதிகளில் ஆகஸ்ட் 25 - ம் தேதி முதல் 27 - ம் தேதி வரை இதற்கான முன்னேற்பாடு முகாம்கள் நடத்தப்படும் .
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் : வங்கிக் கணக்கு இல்லாதவர் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் ,அவரை வங்கியில் கணக்குத் துவங்குமாறு கூறுங்கள் .இது ஒரு சேவையாக இருக்கட்டும்.
.................................இது ஒரு சேவையாக இருக்கட்டும் ............................
நிதி அமைச்சகம் ,
இந்திய அரசு .

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing