Saturday 20 December 2014

இறைபக்தி- செய்யக் கூடாத செயல்கள் என்ன?





  

இறைபக்தி உடையவர்கள் கண்டிப்பாக செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன? – தெரிந்து கொள்க•
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்க க்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போட க்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்ல க்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7.சுவாமிக்கு நிவேதனம் ஆகும்போது பார்த்தல்கூடாது
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷி ணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவ தைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடு விலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்ல க்கூடாது
10.இரவில் துணி துவைக்கக்கூடாது. குப்பையை வெளி யே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னு டைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத்தகராறு, மந்திரம், உடலுற வு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொ ழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing