Saturday 27 December 2014

தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?



தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?


டார்பியை போன்று வாழ்க்கையில் மன விரக்தியாலும், மன சோர்வினாலும், பொறுமை இன்மையாலும் வெகு அருகாமையில் நல்லதொரு வாய்ப்பினை நழுவ விட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம்.

இந்த உலகத்தில் தோற்று போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள் பொறுமையின்மை, மன விரக்தி, மன சோர்வு போன்றவைதான்.
அவசரப்பட்டு மன விரக்தியில் செய்யும் காரியங்களில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.
 வாழ்க்கையில் மன விரக்தி அடைந்தவர்கள், பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்களுடைய மன விரக்தியும், பொருமையின்மையும் அவர்களை படு குழியில் தள்ளிவிடும்.
மனவிரக்தியால், பொருமையின்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய செல்வத்தை, பணக்காரர் ஆகும் வாய்ப்பை இழந்தார் என்பதை தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்.
பணக்காரர் ஆகா வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அந்த ஆசை டார்பி என்ற ஒரு இளைஞனின் மாமாவுக்கும் வந்தது. அப்போது அவர்கள் ஊருக்கு அருகில் உள்ள சுரங்கத்தில் இருந்து தங்கம் கிடைக்கிறது என்று ஒரே பேச்சு. டார்பிக்கும் அந்த வாலிபனுக்கும் அந்த ஆசை தொற்றி கொண்டது.
தங்கம் கிடைக்கும் சுரங்கத்தை தோண்டி தங்கம் எடுப்பதர்க்கு machinary போன்ற உபகரணங்கள் தேவைப்பட்டதால் பலரிடம் உதவி கேட்டு துளை போடுவதற்குண்டான இயந்திரத்தை டார்பி வாங்கினார்
இயந்திரத்தின் உதவி கொண்டு தங்கம் இருக்கிறது என்ற சொல்லப்பட்ட இடத்தில் வாலிபனும், டார்பியும் தோண்ட ஆரம்பிக்கின்றனர். துளை போட்டுகொண்டு தங்கம் எப்போது தென்படும் என்ற ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். ஆரம்பத்தில் தங்கம் தென்படுவதர்க்கான அறிகுறி சில அடிகளில் தென்பட்டாலும் முழுமையான தங்கத்தை அவர்களால் பார்க்க இயலவில்லை. ஆனால் துளை போடும் இயந்திரம் துளை போட்டு பூமிக்கடியில் சென்று கொண்டு இருக்கிறது.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இரவும் பகலும் சென்று கொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட 500 அடி வரை தோண்டி விட்டனர். ஆனால் தங்கம் தென்படுவதர்க்கான அறிகுறியே இல்லை.
வாலிபனும் அவனுடைய மாமா டார்பியும் மன சோர்வடைந்து, பொறுமை இழந்து, மன விரக்தியுடன் "இனி தோண்டி பிரயோஜனம் இல்லை, இத்தனை அடி தோண்டியும் கிடைக்காத தங்கம் இனிமேல் கிடைக்காது" என மன விரக்தியுடன் தோண்டும் வேலையை நிறுத்திவிடுகின்றனர்.
சரி, இனி இந்த துளை போடும் இயந்திரத்தை வைத்து நாம் ஒன்றும் பண்ணமுடியாது, இதை விற்று அதில் கிடைக்கும் தொகையை கடன் வாங்கியவர்களுக்கு ஓரளவு திருப்பி கொடுத்து விடுவோம் என முடிவெடுத்து, கிடைத்த விலைக்கு ஒருவரிடம் அந்த இயந்திரத்தை விற்று விடுகின்றனர்.

இயந்திரத்தை வாங்கியவருக்கு சுரங்கத்தை பற்றிய அனுபவம் கிடையாது.
ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம். டார்பி இவ்வளவு தூரம் தோண்டி தங்கம் கிடைக்க வில்லையென்றால் என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள ஆவல்.
நமக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது. சுரங்கத்தை பற்றி நன்கு தெரிந்த ஒரு engineer இங்கு உண்மையிலேயே தங்கம் இருக்கிறதா அல்லது இல்லையா ஏன் இத்தனை அடி தோண்டியும் தங்கம் கிடைக்கவில்லை என கேட்போம் என்று அனுபவம் வாய்ந்த ஒரு engineer அங்கு வரவழைத்து கேட்க்கிறார்.
அந்த engineer உம் தங்க சுரங்கத்தை பார்வையிடுகிறார். "இங்கு தங்கம் கிடைக்காது என்று யார் சொன்னது" "ஏற்கனவே தோண்டியவர்களுக்கு தவறு ஏன் நடக்கிறது, என்று சிந்தித்து செயல் பட வேண்டிய அளவிற்கு அனுபவம் இல்லை அதனால் பாதியிலேயே விலகிவிட்டனர்" என்று கூறுகிறார்.
"நீங்கள் உங்கள் வேலையை தொடருங்கள். ஏற்கனவே தோண்டிய இடத்தில் இருந்து மூன்று அடி தூரத்தில் நிச்சயமாக தங்கம் கிடைக்கும்" என கூறி, தொடர்ந்து தோண்ட செய்கிறார். அவர் கூறியவாறு machine வாங்கியவர் குழியை தோண்டுகிறார். சொன்னவாறு சரியாக 3 அடியில் குவியல் குவியலாக தங்க துகள்கள், தங்க கட்டிகள், தங்க பாலங்கள். இவ்வளவும் எங்கு கிடைத்தன.
டார்பியும் அந்த வாலிபனும் விரக்தியடைந்து விட்டு சென்ற இடத்தில் இருந்து வெறும் 3 அடி தூரத்தில் கிடைத்தது.
அந்த தங்கங்களை எடுத்து விற்று மிக பெரிய கோடீஸ்வரர் ஆனார் அந்த அடிமாட்டு விலைக்கு இயந்திரத்தை வாங்கியவர்.
டார்பியும் அந்த வாலிபனும் கிட்டத்தட்ட 500 அடி குழி தோண்டி இருப்பார்கள் . ஆனால் அடுத்த 3 அடி தூரத்தில் கிடைக்கவேண்டிய தங்கத்தை அனாவசியமாக தவற விட்டு விட்டனர். அதற்க்கு என்ன காரணம் அவர்களுடைய மன விரக்தி, மன சோர்வு, பொறுமையின்மை.
"பொறுமை கடலினும் பெரிது"
"ஆக்க பொருத்தவன் ஆற பொறுக்கவில்லை" போன்ற எத்தனயோ பழமொழிகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அதை நிறைய பேர் கடைபிடிப்பது இல்லை.
டார்பியும் சற்று பொறுமை காத்திருந்தால், மன சோர்விற்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் 500 அடி தோண்டிய அவருக்கு அடுத்த 3 அடியில் தங்கத்தை பார்த்திருப்பார்.
அதைத்தான் நம் முன்னோர்கள் ""ஆக்க பொருத்தவன் ஆற பொறுக்கவில்லை" அதாவது உணவை தயார் செய்யும் வரை பொறுமையாக இருந்தவன் சூடான அந்த உணவு சற்று ஆறுவதற்கு பொறுமையாக இல்லையாம்". அவசர அவசரமாக சூடான உணவை சாப்பிட்டு நாக்கை சுட்டுக்கொண்டதுதான் மிச்சமாம்.
ஒரு மனிதனுக்கு பொறுமை இன்மையும், மனசோர்வும், விரக்தியும் ஏற்படுவதற்கு காரணமே அவருடைய மனம்தான் . இவைகளே ஒரு மனிதன் வாழ்க்கையில் பல விசயங்களில் தோல்வி அடைவதற்கு காரணம் ஆகி அந்த தோல்வியில் இருந்து அவனை மீள முடியாமல் செய்து விடுகிறது.
மனது சரியாக சிந்திக்க தொடங்கினால் விரக்தியும் சோர்வும் பொறுமையின்மையும் ஏற்பட வாய்ப்பில்லை. மனசோர்வும், பொறுமையின்மையும், விரக்தியும் இன்றி வாழ வேண்டும் என்றால் தியானம் போன்ற கலைகளை கொண்டு அவனுடைய மனதினை பழக்க வேண்டும். அப்படி பழகும்போது தோல்விகளில் இருந்து சுலபமாக மீண்டு விடலாம்.

 
தியானத்தின் மூலம் ஒருவன் தன்னுடைய மனதினை கட்டுக்குள் வைத்திருக்கும்போது பொறுமை, விரக்தியின்மை, மன சோர்வின்மை போன்ற நல்ல குணங்கள் உருவாகின்றன. அது போன்ற நல்ல குணங்கள் உருவாகும் போது அவன் வாழ்க்கையில் டார்பி 3 அடி தூரத்தில் தங்கத்தை நழுவவிட்டது போல எந்த ஒரு விசயத்திலும் தோல்வி அடைய வேண்டி வராது.

 

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing