- வாசுதேவனும், கோவிந்தனும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஓர் நதிக்கரையில் அமர்ந்திருந்தனர். கோவிந்தன் தன் கால்களை ஓடும் நீரில் வைத்தான். பின்பு, வெளியில் எடுத்தான். வாசுதேவன், கோவிந்தனை மீண்டும் கால்களை நீரில் வைக்கச் சொன்னான். கோவிந்தனும் அவ்வாறே செய்தான்.
வாசுதேவன், கோவிந்தனிடம்,"" உன் கால்களை மீண்டும் ஆற்றில் வைக்கச் சொன்னேனே! எதனால் என்று உனக்கு புரிகிறதா?'' என்றான்.
கோவிந்தன் அவனிடம், ""நான் முன்பு வைத்த ஆற்று நீரில் இப்பொழுது காலை வைக்கவில்லை. இப்பொழுது ஆற்றில் ஓடிக் கொண்டிருக்கும் நீர் வேறு. முதலில் ஓடிய நீர் வேறு. இன்னும் சொல்லப்போனால், உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை குறிக்கிறது,'' என்றான்.
""உன் விளக்கம் புரியவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்!'' என்ற வாசுதேவனிடம், கோவிந்தன், ""நான், காலை வைக்கும் நேரம் நிகழ்காலம். அதற்கு முந்தியது கடந்த காலம், அந்த ஆற்று நீர் ஓடிவிட்டது. இனி நான் காலை எடுத்த பிறகு வருவது எதிர்காலம். எப்படிப்பட்ட நீர் வரும் என்று தெரியாது. ஆகையால் நிகழ்காலம் தான் நிச்சயமானது,'' என்றான்.
""சரியாகச் சொன்னாய். ஓடும் ஆற்றைப் பார்க்கிறாயே! இதிலிருந்து என்ன புரிகிறது?'' எனக்கேட்டான் வாசு.
அதற்கு கோவிந்தன், ""இந்த ஆறு, மலையில் ஓர் சிறிய ஊற்றாக உற்பத்தியாகி, பல கிளை நதிகளுடன் சேர்ந்து, ஓர் பெரிய நதியாக உருவெடுத்துள்ளது. பல மேடுகளையும், பள்ளங்களையும் கடந்து நீர் வீழ்ச்சிகளை உருவாக்கி, அணைகளில் தேங்கி, பின் அங்கிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையும் அதுபோல் தான். சிறிதாக ஆரம்பித்து பல போராட்டங்களையும், தோல்விகளையும், வெற்றிகளையும், சங்கடங்களையும் சந்தித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆறு கடைசியில் கடலில் கலந்து விடும். அதுபோல், நாமும் ஒருநாள் மரணத்தில் இறைவனுடன் கலந்து விடுவோம்'' என்றான்.
""கோவிந்தா! இன்னும் யோசி!! ஆறு என்ன கூறுகிறது என்று கேள்!'' என்றான்.
கோவிந்தன் வாசுவிடம்,"" ஆற்றுநீர் கடலில் சேர்கிறது. கடல் நீர் ஆவியாகிறது. பின்பு மேகமாகிறது. மேகம் அழிந்து மழைநீர் உண்டாகிறது. பின்பு ஆற்று நீராகிறது. ஆற்று நீர் ஓடி, பயிர்கள், செடிகள், வளர்ந்து மனிதன் போல் உயிர்கள் வாழ்கின்றன.
ஆகையால் ஆற்றுக்கு நிரந்தர மரணம் கிடையாது. அது உருமாறி உலகை வாழ வைக்கிறது. அதுபோல் மனிதனுக்கும் பிறப்பு, இறப்பு நிகழ்கிறது. மனிதன் மரணமடைவது தற்காலிகமாகவே. அவன் மீண்டும் பிறப்பெடுக்கிறான். எனவே இதை மரணம் என்று சொல்வதை விட "உருமாற்றம்' தான் என்று சொல்லலாம். எனவே, பிறப்பு இறப்புகண்டு கலங்கத் தேவை யில்லை,' 'என்றான்.
ஆற்றுக்குள் இவ்வளவு விஷயம் இருக்கிறது! புரிகிறதா!
Make Others Comfortable and you will see the nature (god) will take care of your comfortable
Saturday, 28 March 2015
பிறப்பு இறப்பு கண்டு கலங்கத் தேவையில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Excuse
Note: Dear Friends….Excuse any mistake in my writing
No comments:
Post a Comment