லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு. இந்த பொண்ணு லட்சுமிகரமாக இருக்கா! இந்த வீடு மங்களகரமாக இருக்கு! என்றெல்லாம் சொல்வார்கள். மாவிலைத் தோரணம், திருவிளக்கு, மாக்கோலம், துளசிமாடம், மாட்டுக்கொட்டில் போன்றவற்றில் எல்லாம் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். பணம் இருந்தால் மட்டும் லட்சுமிகரம் வந்து விடாது. சில பணக்கார வீடுகள் தூங்கி வழிவது போல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், எந்நேரமும் பக்திமணம் கமழ வைத்திருப்பதே லட்சுமிகரம்.

No comments:
Post a Comment