இந்தியன் ரயில்வேயின் சமீபத்திய பெயர் மாற்றும் வசதியை அறிமுகபடுத்தியுள்ளனர். இது சிலருக்கு தெரிந்தாலும் எப்படி மாற்றலாம் – யார் மாற்றலாம் – இதன் கால அவகாசம் என்ன என்பதே இந்த போஸ்ட்.
Indian Railway booking Website ID: https://www.irctc.co.in/eticketing/loginHome.jsf
1. நீங்கள் ஒரு விஷேசத்துக்கோ அல்லது கல்யாணம் உட்பட ஏதோ ஒரு இடத்துக்கு பயணம் செய்ய வேண்டும் அதே சமயம் வீட்டில் யார் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யவில்லை என்றாலும் கவலை இல்லை – டிக்கட்டை முதலில் புக் செய்யுங்கள் வீட்டில் உள்ள ஒருவரின் பெயரில் – பின்பு பயண தேதிக்கு ஒரு நாள் (24 மணி நேரம்) முன்பு யார் பயணிக்கிறார்களோ அவர்கள் பெயரில் டிக்கட்டை மாற்றி கொள்ள முடியும். இதற்க்கு கட்டணம் இல்லை.
2. நீங்கள் கல்லூரியில் அல்லது ஐடிஐயில் படிக்கும் மாணவர்கள் என்றாலும் கவலை இல்லை, எந்த ஒரு மாணவரின் பெயரில் புக் செய்திருந்தாலும் – கல்லூரி தாளாளர் அல்லது பிரின்சிபாலிடம்
ஒரு லெட்டர் பெற்று வேறு ஒரு மாணவ மாணவிக்கு மாற்றி கொள்ள முடியும் அனால் 48 மணி நேர அவகாசத்தில். இது அங்கீகரிக்கபட்ட பள்ளிகளுக்கும்
பொருந்து. குரூப் டிக்கட் இல்லையெனில் கூட கவலை வேண்டாம். பல்க் புக்கிங் செய்திருந்தால் 10% சதவிகிதத்துக்கு
மேல் மாற்ற இயலாது மற்றும் ஒரு முறை மற்றுமே மாற்ற முடியும்.
3. ஒரு கல்யாணத்திற்க்காக சுமார் 30 பேர் வருவார்கள் எனில் முப்பது டிக்கட்டை கண்டிப்பாய் செல்லும் ஒருவரின் பெயரில் பல்க் புக்கிங் செய்து பின்பு கண்டிப்பாய் வருபவர்களின் பெயரை மாற்றி சேர்க்கலாம். இதற்க்கும் 48 மணி நேர அவகாசம் தான் தேவை
4. அரசு ஊழியர்கள் அல்லது அரசின் பணிக்காக செல்லுபவர்கள் கூட நேரடியாக இன்னொரு ஊழியரின் பெயரில் 24 மணி நேர அவகாசத்தில் மாற்ற முடியும்.
5. ஸ்கவுட்ஸ் / என் சி சி கேடட் மாணவர்கள் மற்றூம் அதை சார்ந்த அனைவரும் 24 மணி நேரத்தில் மாற்ற இயலும்.
மேல் கூறிய அனைத்து மாற்றங்களுக்கும் நீங்கள் அணுக வேண்டியது – டிக்கட் கவுன்ட்டர் பின்புறம் உட்கார்ந்து இருக்கும் சீஃப் ரெஸர்வேஷன் சூப்பர்வைஸர் அவரிடம் மாற்றி கொள்ள இயலும். இதற்க்கு லைனில் நிற்க தேவையில்லை.
Indian Railway booking Website ID: https://www.irctc.co.in/eticketing/loginHome.jsf
அதெல்லாம் முடியாதுன்னு திமிர் காட்டும் அதிகாரிகளுக்கு இந்த பிரின்ட் அவுட்டை காட்டவும்.
No comments:
Post a Comment