ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில்
ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். இவை அனைத்தும்தீமைகளை
ஏற்படுத்தும். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே
தெரியாது.
இன்று தொலைதூரப் பயணங்களின் போது ஹோட்டல் உணவு
அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக்
டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள்.
கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாக பயன்படுத்துகின்றனர்.
சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது
பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும்
கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும்.
ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில்
ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை
ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள,
சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275
ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின்
நிலை இன்னும் மோசம்.
ஆகவே நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்
மற்றும் கண்டெய்னர்களில் உள்ள எண்களைப் பற்றி தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப
அளவுடனும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்தலாமே...!!
பிளாஸ்டிக் ரகசியம்...!!!
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1. Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2. High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3. Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
4. Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்.
5. Polypropylene - தயிர் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6. Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளையும் பயன்படுத்தி இருப்பார்கள்.
சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால்
தயாராகின்றன.
இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5 குறைந்த மோசமான பிளாஸ்டிக்
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது - 1
மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7
எனவே இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும்
நல்லது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment