ஹிந்து மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாட்டை விளக்கும் நியாயம் இது.
ஒருவன் இறக்கும் போது கடைசியில் எதை நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆவான் என்று இந்த நியாயம் விளக்குகிறது.
இதை விளக்க புராணங்களில் ஏராளமான கதைகள் உள்ளன என்றாலும் பாகவதத்தில் கூறப்படும் பரத மன்னனின் கதை மிகவும் பிரசித்தமானது. அவனிடம் மான் ஒன்று இருந்தது. அவன் எங்கு போனாலும் கூடவே அந்த மானும் போகும். அதை அவன் உயிருக்கு உயிராக நேசித்து வந்தான். அவன் மரணப்படுக்கையில் இறக்கும் போது அந்த மான் நினைவாகவே உயிரை விட்டான்.மறுபிறவியில் அவன் ஒரு மானாகப் பிறந்தான்.
No comments:
Post a Comment