பகலில் புணரமாட்டோம் (no sex in day time),
பகலில் உறங்கமாட்டோம்,
மூத்த பெண்களோடு உடலுறவு கொள்ளமாட்டோம்,
காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.
மலத்தை , சிறுநீரை அடக்கமாட்டோம்,
உறங்கும் போது இடப்பக்கம் மட்டும் ஒருக்களித்து படுப்போம்,
பால் உண்போம்,
மூலநோயை ஏற்படுத்துகின்ற உணவு வகைகளை உண்ணமாட்டோம். மூலநோய் என்பது எல்லா நோய்க்கும் இது தான் மூலகாரணம். இதன் மூலம் உடல் நோய் எதிப்பு சக்தியை இழந்து வருவதன் அடையாளமாக இன் நோய் கருதப்படுகின்றது,
புளித்த தயிர் உண்போம்,
நேற்று சமைத்த பொருட்கள் அமுதென்றாலும் அருந்தமாட்டோம்,
எவ்வளவு அறிவு வந்தாலும் பசிக்காமல் உண்ணமாட்டோம்,
இரு வேளை மட்டுமே உண்ணுவோம்,
இரவில் உறங்குவோமே தவிர பகலில் உறங்கமாட்டோம்,
கிழங்குகளில் கருணைக்கிழங்கை மட்டும் புசிப்போம்,
பிஞ்சு வாழைக்காய்களையே சமைத்து உண்ணுவோம்,
மாதம் ஒரு முறை உடலுறவு கொள்ளுவோம்,
உணவு உண்ணும் போது தாகம் இருப்பினும் இடையிடையே நீர் அருந்தமாட்டோம்,
சாப்பிட்ட பின்பு சிறுநடை செல்வோம்,
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்து எடுத்துக் கொள்வோம்,
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.
வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.
மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.
ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.
தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.
இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.
பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.
அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.
நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.
பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.
இவற்றை எல்லாம் செய்தால் நாமிருக்குமிடத்தில் எமனுக்கு என்ன வேலை! நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.
>>> பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எப்படி வாழ வேண்டும் என்று நம் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர். நாமோ நம் வாழக்கை முறையை தொலைத்துவிட்டு நோய்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment