இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல் :
"இஞ்சி வெண்டயிர்இலைக்கறி பாகற்காய் கொஞ்சுங்காட்டுக்கிளாக்காயரு நெல்லி துஞ்சுமே புளியங்காய் துவையலும்
மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு
அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகு வாள்
எஞ்சில் துக்கமுமெய்திடுந் தப்பாது
மேற்கண்ட பாடலில் அகத்தியர் பெருமான் மிகத்தெளிவாக விளக்கம் அளிக்கின்றார்.
இரவில் விலக்க வேண்டிய உணவு வகைகள் :
இஞ்சி -தயிர்- கீரை வகைகள்-பாகற்காய்-கிளாக்காய்-அருநெல்லி- மற்றும் புளிதுவையல் போன்றவற்றை இரவில் உண்பவர்களிடம் இருந்து
மகாலட்சுமி பயந்து விலகுவாள் .
மற்றும்மூதேவி வந்து குடியேறுவாள் .
துக்கம் வரும்.இது இறைவன் ஆணை என்கிறார்.
அறிவியல் பூர்வமாக பார்த்தாலும் மேற்கண்ட உணவு வகைகள் நமது உடலில் சுரக்கும் பித்த நீரை ஊக்குவிப் பவை மேலும் இரைப்பையில் சேதம் விளைவிக்கும்.
அதனால் குடற்புண்,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம் போன்றவைகளை தோற்றுவிக்கும்.
எனவே இவ்வகை உணவுகளை இரவில் நீக்கி நலம் பெறலாம்
👍
No comments:
Post a Comment