Saturday 10 October 2015

மகாலட்சுமியின் அருள் பார்வை பெற

ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியை தரிசித்து அஞ்சலி செய்தனர். அப்போது தேவர்கள் மகாலட்சுமியை வணங்கி, ``அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்துத் தங்கள் அருளைப் பெற வழியென்ன? பொதுவாக தாங்கள் இருக்குமிடம் எது?'' என பக்தியோடு வினவினர். மலர்ந்த முகத்துடன் மகாலட்சுமி தேவர்களை நோக்கி கீழ்க்கண்டவாறு விடையளித்து அருளினாள்.


தேவர்களே, எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையைச் சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களோ, எந்தக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மன வேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ, எங்கு ஆசாரம் குறையின்றி கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷடிக்கப்படுகிறதோ, எங்கு தேவ பூஜை, ஒளபாசநம், வைஸ்வதேவம், மாத்ரு, பித்ரு சிஷ்ருஷை நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு கோ பூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன். இது மகாலட்சுமியின் அருள்வாக்கு.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing