]அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு + விஷு தின வாழ்த்துக்கள்!!
கல்வி அதிபதி ஸ்ரீ ஹயக்கிரீவரின் அன்பு மகளே துர்முகி.
துர்முகி புத்தாண்டாக ஒளிர்ந்துள்ளது.
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர்.
ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர்.
அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது.
அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.
ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி.
அதற்கு அவள் கணவன்,
அப்படி செய்யக் கூடாது.
கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு#சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர்.
நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம்.
கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம்.
இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம்.
கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும்.
அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார்.
உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.
அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை.
காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை.
வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை.
நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.
இது, சிவலிங்கம்;
இது கல்;
இது மண்;
என்ற பேதமின்றி,
சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம்.
இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா?
இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும்.
பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது.
எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.
தமிழ் வருட பிறப்பு ஒரு கண்ணோட்டம்.
சித்திரை 1 ம் தேதி தமிழ் வருடப்பிறப்பாக நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம்.
அது பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
இன்று நாம் கலியுக மன்மத வருடத்தை கடந்து கலியுக துன்முகி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5118வது வருடம்.
அது பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
இன்று நாம் கலியுக மன்மத வருடத்தை கடந்து கலியுக துன்முகி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5118வது வருடம்.
தமிழர்களின் ஜோதிட கணிப்புப்படி, 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் பெரும்பாலும் ஆண்டுகளை பெரிதாக கருதுவது கிடையாது. இந்த 60 வருடங்களையும் 3ஆக பிரித்து, (20 வருடங்கள்)
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.
60 வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு.
1. பிரபவ - (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம - (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி - (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஐய - (2014-15)
29. மன்மத - (2015-16)
30. துன்முகி (2016-17)
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி - (2020-21)
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண - (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி - (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2 உண்டு.
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.
நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம். நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள்.
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம் = --------
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.
1. பிரபவ - (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம - (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி - (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஐய - (2014-15)
29. மன்மத - (2015-16)
30. துன்முகி (2016-17)
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி - (2020-21)
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண - (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி - (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2 உண்டு.
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.
நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம். நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள்.
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம் = --------
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.
கிருத யுகம் 4*432000= 17,28,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.
இவை அனைத்தும் தமிழ் புத்தாண்டின் சுருக்கமான விளக்கமே
ஈசன் திருவருளால் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டில் நலமும், வளமும் பெற்று தாங்கள் நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன். தங்கள் குடும்பத்தினருக்கும், தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீங்கள் அனைவரும் நலமாக வளமாக மகிழ்ச்சியாக நிம்மதியாக நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்!!
No comments:
Post a Comment