கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே, இணயம் என்ற இடத்தில் அமைய உள்ள துறைமுகத்தால் ஏற்படும் பயன்களை சுட்டி காட்டிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாலை மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை காட்டிலும், நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தரும் மத்திய அரசு அதற்காக, 'சாகர் மாலா' என்ற திட்டத்தை செயல்படுத்துவதில், அதிக அக்கறை காட்டி வருகிறது. 'இத்திட்டத்தின்படி, தமிழகத்தில், 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், குளச்சல், இணயம் துறைமுகத்தில் அமைக்கப்படும் சரக்கு முனையத்தால், குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் இணையதளம் வழியாக அவர்கள் தெரிவித்த கருத்துகள்:
ஸ்ரீராம், மஸ்கட், ஓமன்: குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமத்து மக்களிடம், மிக சரியான புரிதல் அவசியம் ஏற்பட வேண்டும். இதனால், மாவட்டத்திற்கு ஏற்படும் முன்னேற்றம் உள்ளிட்ட நன்மைகளை புரிய வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த, ஒரு நெருடலும் ஏற்படாமலும் இத்திட்டம் தொடங்க வேண்டும்.
காசிமணி பாஸ்கரன், சிங்கப்பூர்: நீர்வழி போக்குவரத்து, குறைந்த விலையில் பொருட்களை, மற்ற மாநிலங்களுக்கு அனுப்பு வழி செய்யும்; நல்ல விஷயம். தமிழகத்தில் அதிக கடல் வழி சாத்தியம்.
தங்கை ராஜா, இந்தியா: மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்படும் எத்தனையோ ரகசிய உடன்பாடுகளுக்கு மத்தியில், மதுரவாயல் திட்டத்துக்கு அனுமதி வாங்க முடியாதா...
புருஷோத்தம்மன், மலேசியா: 'சாகர் மாலா' திட்டம் தமிழகத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது. மாநில அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் நல்ல வளர்ச்சி இருக்கும்.
No comments:
Post a Comment