இது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஹிங்கோனியா என்ற ஊரிலுள்ள கோஷாலா எனப்படும் பசுப்பாதுகாப்பு மையம். இங்கு நூற்றுக்கணக்கான பசுக்கள் கடந்த சில நாட்களில் இறந்துள்ளன. பிஜேபியின் மாநில அரசு இதன் நிர்வாகத்தை ஒரு காண்ட்ராக்டரிடம் விட்டுள்ளது. அவர் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் தராததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பணிபுரியும் 266 பேரில் 166 பேர் பெண்கள். மையும் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழை வெள்ளம் புகுந்து சகதி அதிகமாகிறது. இச்சூழலில் சரியான பராமரிப்பு இல்லாததால் பசுக்கள் இறந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சென்ற பிரண்ட்லைன் நிருபரிடம் கோஷாலா ஊழியர் ஒருவர் கூறியதைக் கேளுங்கள்:
“நாங்கள் பசுக்களை சகதியிலிருந்து மீட்டு, அவற்றின் காயங்களுக்கு மருந்துபோடும் கடுமையான வேலையைச் செய்கிறோம். பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளிலிருக்கும் ‘பசுப்பாதுகாவலர்கள்’ எங்கே? பஜ்ரங் தள், விஎச்பி அமைப்பிலிருந்தும் தலைவர்கல் யாரும் இந்தப் பக்கம் வரவில்லை. சில நேரங்களில் அவர்கள் இங்கு வந்து போட்டோ எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்”
இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட “பசுப்பாதுகாப்பு” அமைப்புகள் உள்ளதாக பிஜேபி உறுப்பினர் ஒருவரே கூறியிருக்கிறார்.
இவர்கள் பசுக்களையும் பாதுகாக்க மாட்டார்கள். பசுக்களை உண்மையிலேயே பாதுகாத்து வருபவர்களையும் பாதுகாக்க மாட்டார்கள்.
பேசும் வசனங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை!
No comments:
Post a Comment