அகண்டபாரதம் அமைத்தே தீருவோம் - சபதமேற்பு நாள் ஆகஸ்ட் 14
பிரிவினைக்கு யார் காரணம்?
800 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியிலும், 200 ஆண்டுகள் கிறிஸ்தவ வெள்ளையர்கள் ஆட்சியிலும் பிரியாத பாரதம் பிரியக் காரணமென்ன? யார் காரணம்?
அப்போதிருந்த காங்கிரஸ்காரர்கள், விடுதலை புரட்சியாளர்கள், வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்களில் யார் காரணம்?
தேசத்தை என் உயிர் இருக்கும்வரை பிரிக்கமுடியாது என்றார் கா ந்தி. தேசப்பிரிவினை என்பது சுத்த முட்டாள்தனம் என்றார் நேரு. தேசப் பிரிவினை கேட்டால் வாளோடு வாள் மோதும் என்றார் வல்லபாய் படேல்.இன்னும் பலர் தேசம் பிரிக்கப்படகூடாது என வீரவசனங்கள் பேசினர்.
800 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியிலும், 200 ஆண்டுகள் கிறிஸ்தவ வெள்ளையர்கள் ஆட்சியிலும் பிரியாத பாரதம் பிரியக் காரணமென்ன? யார் காரணம்?
அப்போதிருந்த காங்கிரஸ்காரர்கள், விடுதலை புரட்சியாளர்கள், வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்களில் யார் காரணம்?
தேசத்தை என் உயிர் இருக்கும்வரை பிரிக்கமுடியாது என்றார் கா ந்தி. தேசப்பிரிவினை என்பது சுத்த முட்டாள்தனம் என்றார் நேரு. தேசப் பிரிவினை கேட்டால் வாளோடு வாள் மோதும் என்றார் வல்லபாய் படேல்.இன்னும் பலர் தேசம் பிரிக்கப்படகூடாது என வீரவசனங்கள் பேசினர்.
இவர்கள் அனைவரின் எதிர்ப்பையும்,சவால்களையும் மீறி இந்த நாடு பிளவு பட்டதன் காரணம் என்ன? தெரியுமா?
தேசப்பிரிவினைக்கு காரணமானவர்களும் , அவர்களது அடாவடிச் செயல்களும் மறைக்கப்பட்டன.நம்முடைய பாடத்திலும் இவை எவையும் இல்லை.
தேசப்பிரிவினை எப்படி வந்தது? இதற்கு அடிப்படை காரணங்கள் என்ன?என்பதை ஆழமாக பார்க்கவேண்டும்.
முதல் சுதந்திரப்போர்
1857 ல் வெள்ளைய கிறிஸ்தவர்களை எதிர்த்து சிறு மன்னர்களும், தேசபக்த தலைவர்களுமாக சேர்ந்து நாடு முழுக்க ஆங்காங்கே தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . இந்த சுதந்திரப் போரை கலகம், கலவரக்காரர்கள் என்று சொல்லி வெள்ளையர்கள் அடக்கி ஒடுக்கினார்கள்.
இதுவரை பாரத நாட்டுமக்கள் சுதந்திரத்திற்காக போராட மாட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தான் கிறிஸ்தவன்.அவர்களின் எண்ணம் தகர்ந்தது.
உடனே பிரிட்டனில் கொள்கை வகுப்பவர்கள் கூட்டம் நடந்தது.இவர்கள் ஒரு சதித்திட்டம் வகுத்தனர்.
இனி இவர்கள் போராடக்கூடாது.
பாரதம் அவர்களுடைய நாடு என்ற எண்ணம் வரக்கூடாது
இந்த நாட்டு மக்கள் ஒன்றல்ல –பலஜாதி –பல பழக்கம்-பல உணவு—பல உடை எனவே இவர்கள் ஒன்றல்ல என்ற கருத்தை பரப்பவேண்டும்.
இது ஒரே நாடு அல்ல., பலமன்னர்கள் , பல தேசம், பல ஜமீன் என்ற கருத்ததையும் பரப்பவேண்டும்
பிரித்தாளும் சூழ்ச்சி
இந்த வேற்றுமை உணர்வை நாடு முழுதும் பரப்பவேண்டும் என திட்டமிட்டனர்.
இதற்காக இங்கிலாந்திலிருந்து ஜான் என்பவன் வந்து இந்த கருத்துகளை நாடு முழுதும் பல இடங்களில் பிரச்சாரம் செய்தான்.
அறிவு ஜீவிகள் என்று மக்களால் கருதப்படுபவர்கள் மூலமும் இந்தக் கருத்தை பரவச்செய்தான். இவர்கள் வெள்ளையனின் அடிமைகளாகவே செயல்பட்டனர்.(WHITE MAN’S BURDEN: பாரத நாட்டை சரி செய்யவும், ஆளவும், அதிகாரம் செய்யவும் இந்தச் சுமையை / பொறுப்பை ஆண்டவன் இவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்தான்.)
காங்கிரஸ் தோற்றம்
பாரதநாட்டு மக்கள் மனதிலே உள்ள வெள்ளையர் எதிர்ப்புணர்வை குறைக்கவும் , சுதந்திர போராட்ட உணர்வை மழுங்கச் செய்யவும், மக்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிக்கவும்,ஒரு பெட்டிசன் போடும் இயக்கமாக ஆலன் ஆச்டோவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரனால் 1885 ல் துவங்கப்பட்டது காங்கிரஸ்.
14 வருடங்கள் காங்கிரஸின் தலைவராக அவனே இருந்தான்.
பிற்காலத்தில் பாலகங்காதர திலகர் தலைவரான பின்பே காங்கிரஸ் வெகுஜன இயக்கமாக ஆகியது.”சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை! அதை அடைந்தே தீருவோம்!!” என்ற முழக்கம் செய்யப்பட்டது.
இதன்பிறகே ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் வெள்ளையன் எதிர்ப்புணர்வும்,சுதந்திர வேட்கையும் வளர்ந்தது.
வங்கப்பிரிவினை
1905 ல் ஆங்கிலேய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு வங்காளத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக அறிவித்தான்.
இதை எதிர்த்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக இணைந்து போராடினார்கள்.பெரும் போராட்டமாக இது மாறியது.
இப்போராட்டத்தை பிரிட்டிஷாரால் அடக்க முடியவில்லை
வேறு வழியின்றி பிரிட்டிஷ் அரசு பணிந்தது – பிரிவினையை கைவிட்டது.
இந்த போராட்டத்தை தனது பெரும்படையாலும், சூழ்ச்சித் திட்டங்களாலும் வெல்லமுடியவில்லையே ஏன்? என வெள்ளைகார அரசு தீவிரமாக யோசித்தது.
இந்துக்களும்,முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து போராடியதாலேயே அடக்கமுடியவில்லை எனவே இவர்களை ஒன்று சேர விடக்கூடாது என முடிவு செய்தனர்.
இந்த சதித்திட்டத்தில் ,சூழ்ச்சி வலையில் சிக்கியவர்கள் யார்?யார்?
முஸ்லீம் லீக்
இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அழிக்க மின்டோ பிரபு என்ற வெள்ளைய ஆட்சியாளன் சதித்திட்டத்தை செயல்படுத்தினான்.
வங்காளத்தின் அரசபரம்பரையை சேர்ந்த ஆகாகான் என்ற முஸ்லீமை சந்தித்து சதிவலையை விரித்தான்
நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள்! இந்துக்கள் உங்கள் அடிமைகள்! இந்துக்கள் காபிர்கள்!இவர்களோடு நீங்கள் சேரலாமா? தனித்திருங்கள். உங்கள் மதத்துக்காக தனியாக ஒரு கட்சியை துவக்குங்கள் என்று மின்டோ தூண்டினான்.
1906 டிசம்பர் 30 ல் முஸ்லீம்கள் மாநாடு போட்டார்கள்.அகாகானே நிரந்தரத் தலைவர் என முடிவு செய்தார்கள்.
அந்த முஸ்லீம் மாநாட்டில் சிவப்பு அறிக்கை என்ற ஒன்றைத் கொடுத்தார்கள். அதில்.....
பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பது.
முஸ்லீம்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் கோரினார்கள்.
இந்துக்களோடு முஸ்லீம் குழந்தைகள் பள்ளியில் படிக்ககூடாது
இந்துக்களின் கடையில் பொருள் வாங்காதீர்கள்
இந்துக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்காதீர்கள் போன்ற பல விஷயங்கள் அந்த சிவப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
நாளாக நாளாக மேலும் மேலும் பல கோரிக்கைகளை கேட்டுக்கொண்டே வந்தனர்.
MP., MLA ஏன் அதிகமாக பிரதிநிதித்துவம் கேட்டும் பெற்றுக்கொண்டனர்.
முஸ்லீம்லீக்கும் காங்கிரஸூம்
முஸ்லீம் லீகிற்கு பிரிட்டிஷ் அரசு பல சலுகைகளை அளித்து தனக்கு விசுவாசமாக வைத்துக்கொண்டதைக் கண்ட காங்கிரஸ் கட்சி, நாங்களும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று கூறினர்.
இந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து போராடினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என நினைத்து முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்தது காங்கிரஸ்.
வெள்ளைக்கார அரசு 2 MLA கொடுத்தால் காங்கிரஸ் 2 MLA கொடுத்து தாஜா செய்தது .
முஸ்லீம் லீகின் கோரிக்கை இதனால் அதிகமாகிக்கொண்டே போனது,காங்கிரஸ் அவர்களது கட்டளைக்கு அடிபணிவதும் அதிகமாகிக்கொண்டே போனது.
லக்னோ ஒப்பந்தம்
1914 ல் காங்கிரஸ் மாநாடு நடந்தது.
இதில் முஸ்லீம்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு ஒப்பந்தம் ஆனது.
இந்த ஒப்பந்தத்தை காந்தி,நேரு,படேல்,ஸ்ரத்தானந்தர் போன்ற எல்லோரும் ஆதரித்தனர். இதன் மூலம் இந்து-முஸ்லீம் ஒற்றுமை வந்துவிடும் என பெரும் கனவு கண்டனர்.
கிலாபத் இயக்கம்
1914 – 1918 வரை முதல் உலகப்போர் நடந்தது.
இதில் உலக முஸ்லீம்களின் தலைவனான துருக்கி மன்னன் (கலீபா) பிரிட்டிஷ் அரசால் கொல்லப்பட்டான்.
இதை உலகிலுள்ள எந்த முஸ்லீம்களோ / முஸ்லீம் நாடுகளோ கண்டு கொள்ளவே இல்லை.
இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் கலீபா வேண்டுமென முயற்சி செய்தனர்.
முகம்மதுஅலி, சௌகத் அலி என்ற இரு முஸ்லீம் லீகினைச் சேந்தவர்கள் துருக்கி சென்று கமால்பாஷா என்ற அரசனை சந்தித்து நீ கலீபா ஆகு என வேண்டினர்.
அவன் இப்போது மதம்பற்றி கவலை இல்லை என்நாட்டை முன்னேற்ற வேண்டியுள்ளது., இது ஏன் வேலை இல்லை என்று மறுத்துவிட்டான்.
இந்த இருவரும் சௌதி மன்னன் அப்துல் அஜீஸை சந்தித்து நீ கலீபா ஆகு என்றனர்.. அப்துல் அஜீசோ நீங்கள் உண்மையான முஸ்லீமே கிடையாது..,நீங்கள் காபிர்கள் பேசாமல் போய்விடுங்கள் என்றான். இவர்கள் மீண்டும் வற்புறுத்த இரண்டு அலிகளின் தாடியை பிடித்து மண்டையை மோதி இருவரையும் வெளியேற்றினான்.
உலகத்திலுள்ள முஸ்லீம் நாடுகள் கலீபாவை மறுத்துவிட்டதாலும் , தலைவர் வேண்டுமென்றும் வலியுறுத்தி பாரதத்தில் முஸ்லீம்லீக் கிலாபத் இயக்கம் என்ற போராட்டத்தை நடத்தியது.
முஸ்லீம்களின் இந்த இயக்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.இது தேவையற்றது என முகமது அலி ஜின்னா கூறினார்.கலீபாவை உருவாக்குவது நமது வேலை இல்லை என்றார்.
ஆனாலும் பிரிட்டிஷாரை எதிர்த்து முஸ்லீம்கள் பெரிய கலவரத்தை நடத்தினார்கள்.
இப்போராட்டத்தை ஒரே நாளில் அடக்கிய பிரிட்டிஷ் அரசு, முஸ்லீம்களை கைதுசெய்தது.
கைதை எதிர்த்தும் முஸ்லீம்கள் பெரும் கலவரம் செய்தனர்.கேரளத்திலும் இக்கலவரம் நடந்தது. இதற்கு மாப்ளா கலவரம் என்று பெயர் .
இக்கலவரத்தில் ஏராளமான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், பலர் கைகால் இழந்தனர்,பலர் மதமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களின் இந்த கொடூரத்தை காங்கிரஸோ காந்தியோ கண்டிக்காதது மட்டுமில்லை அவர்களது செயலை நியாயப்படுத்தும் விதமாக பேசவும் ஆரம்பித்தனர்.
சுவாமி ஸ்ரத்தானந்தர் படுகொலை
கிலாபத் இயக்கத்தால் இந்துக்கள் பலியானதும்,மதமாற்றப்பட்டதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் கண்டு ஸ்ரத்தானந்தர் மனம் கலங்கினார்.
மதமாற்றப்பட்டவர்களை தாய்மதம் திருப்ப சுத்தி இயக்கம் நடத்தினார்.
இதனால் முஸ்லிம்கள் இவரை கொலை செய்ய தீர்மானித்தனர்.
அப்துல்ரஷீத் என்பவன் சுவாமியின் ஆஸ்ரமத்திற்க்கு சென்று சுவாமியை சந்திக்க வந்தது போல நடித்து, சுவாமியோடு இருந்த சீடரை தண்ணீர் வேண்டும் எனக் கேட்டான். சுவாமியும் சீடரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
சுவாமி தனிமையில் இருந்த சமயத்தில் கொடூரன் ரஷீத் கத்தியால் குத்தி சுவாமியை கொலை செய்தான்.
இதை காங்கிரஸோ அல்லது காந்தியோ கண்டிக்கவில்லை மாறாக முஸ்லீம்கள் அதிக மதப்பற்றுள்ளவர்கள், இதனால் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என நியாயப்படுத்தி பேசினார்கள்
வந்தேமாதரம்
1923 ல் காகிநாடாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தது.அதில் விஷ்ணு புலஸ்கர் திகம்பரர் வந்தேமாதரம் பாடிக்கொண்டிருந்தார். முஸ்லீம்கள் வந்தேமாதரம் பாடுவதை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்தனர்., வெளிநடப்பும் செய்தனர்.
காங்கிரஸ்காரர்கள் முஸ்லீம்களை கெஞ்சி கூத்தாடி மீண்டும் அழைத்து வந்தனர்.
ஆனால் திகம்பரர் பாடியே தீருவேன் என்று வந்தேமாதரம் முழுப் பாடலையும் பாடியே முடித்தார்
இதன் பின் காங்கிரஸ் மாநாட்டில் வந்தேமாதரம் பாடக்கூடாது என முடிவெடுத்தனர்
கொடி கமிட்டி
நம்நாட்டிற்கான தேசியக்கொடி எதுஎன முடிவுசெய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது
அதில் படேல்,மௌலான அபுல்கலாம் ஆசாத்,மாஸ்டர் தாராசிங்.,நேரு., காலேல்கர்.,பட்டாபி சீதாராமையா.,ஆகியோர் அங்கம் வகித்தனர்.
இக்கமிட்டி நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்டது. இறுதியில் காவிக்கொடியே தேசியக்கொடி என முடிவு செய்தது. ஹைதராபாத் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியிடம் இதைக் கொடுத்தது.காந்தி இதை புறக்கணித்தார்.
இந்துக்களுக்கு காவி, கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை, முஸ்லீம்களுக்கு பச்சை இதுமூன்றையும் சேர்த்த இன்றைய தேசியக்கொடியை அவரே முடிவு செய்தார்.
காங்கிரஸ் தாஜாக்கள்
காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை தாஜா செய்யும் பொருட்டு இந்துக்களுக்கு ஏராளமான துரோகங்களை செய்தது
இந்துக்களின் நலன்களுக்காக போராடிய சிவாஜி போன்ற மாபெரும் வீரர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தேசியப்பாடல்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தினர். ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலை ஈஸ்வர் அல்லா தேரே நாம் என மாற்றினர்.
இந்துக்களின் புண்ணிய புருஷர்களையும் முஸ்லீம்களுக்காக இழிவுபடுத்தி- ஸ்ரீராமரை மௌலானா ராமர் என்றும் கற்புக்கரசி சீதையை பேகம் சீதா என்றும் மாற்றி அழைத்து இந்துக்களை அவமதித்தனர்.
தனிநாடு கோரிக்கை
குட்டகுட்ட குனிகிறவனும் முட்டாள்; கொடுக்கிறவனும் முட்டாள் என்பதைப் போல முஸ்லீம்களின் கோரிக்கைகள் நிறைவேற நிறைவேற அவர்களின் கோரிக்கைகளும் விபரீதமாகியது.
முஸ்லீம்களுக்கு என்று தனிநாடு வேண்டும் என கோரிக்கையை வைத்தனர். இதை பலர் எதிர்த்தனர்.
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு பல கஷ்டங்கள், சோதனைகள் வந்தது. அந்த நாடு திக்கித்திணறிக் கொண்டிருந்தது. தோல்விமேல் தோல்வி என அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.
மற்றொருபுறம் பாரதநாட்டில் பிரிட்டிஷார் இங்குள்ள செல்வங்களை எல்லாம் அங்கு கொண்டு செல்லும் சுரண்டல் திட்டம் போட்டனர் (வரிகள்). மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையால் இந்துக்களின் கோபமும் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான போராட்டங்களும் அதிகமாகியதால் வெள்ளைக்கார அரசு திக்குமுக்காடியது.
இன்னொருபுரம் சபாஷ் சந்திர போசின் INS படைகளின் யுத்த நடவடிக்கைகளைக் கண்டு வெள்ளை அரசு கலக்கமடைந்திருந்தது.
மேலும் போலீஸ்,ராணுவம் என அனைத்து பிரிவினரும் வெள்ளை அரசுக்கெதிராக புரட்சி நடத்த துவங்கினர்.பாம்பே துறைமுகத்தில் பெரும் புரட்சி நடந்தது.
இங்கிலாந்திலும் ஆட்சிமாறியது.லேபர் கட்சி ஆட்சியமைத்தது.
தனது உள்நாட்டிலுள்ள கஷ்டங்களை சமாளிக்கவே முடியாமல் திணறுகிற போது,இந்திய போராட்டங்கள் பெரும் சுமை என கருதி சுதந்திரம் கொடுக்க முன்வந்தது.
முஸ்லீம்லீக் சுதந்திரத்தைவிட முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என முரண்டு பிடித்தது.
1946 ல் நேரடி நடவடிக்கை தொடங்கியது.நாடு முழுக்க முஸ்லீம்கள் கொலை,கொள்ளை,கற்பழிப்பு என கண்மூடித்தனமான, கொடூரமான கோர தாண்டவமாடினர்.நவகாளி படுகொலை போன்ற பயங்கரங்கள் நடந்தது. 5 லட்சம் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
முஸ்லீம்களின் கொடூர தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் இந்துக்கள் திருப்பித் தாக்கியதும் அவர்களை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியது.
வெள்ளைக்கார மவுண்ட் பேட்டன் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தான்.இவர் பிரித்தாளும் சூழ்ச்சிபடி முஸ்லீம்களுக்கு பாகிஸ்தானை பிரித்துகொடுத்து இந்தியாவிற்கு நிரந்தர எதிரியை உருவாக்க சதிசெய்தான். இதற்காக நேருவை சம்மதிக்க வைக்க தனது மனைவியையே பயன்படுத்தினான் . நேருவும் இந்த கீழ்தர செயலுக்கு அடிமையாகி, நாட்டை பிரித்துக்கொடுக்க கையெழுத்திட்டார். நாடு பிரிந்தது; பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது.
பாகிஸ்தான் பகுதியில் வசித்த இந்துக்களை முஸ்லீம்கள் கொன்று குவித்தனர். பல ரயில்கள் நிறைய பிணங்கள் மட்டுமே வந்தன. தங்களது சொத்து சுகங்களை எல்லாம் இழந்து லக்ஷக்கணக்கானோர் இங்கு அகதியாய் வந்தனர்.
ஆனால் இங்குள்ள முஸ்லீம்களோ சுக சௌகரியமாக இருந்தனர்.சிலர் மட்டுமே பாகிஸ்தான் சென்றனர்.
இங்கு அகதிகளாக வந்த இந்துக்களுக்கு தங்கும் வசதிகூட செய்யத் தவறியது காங்கிரஸ். இத்தகைய சிக்கலான சூழலில் கணக்குப்படி தரவேண்டிய 52 கோடி பணத்தை உடனே பாகிஸ்தானுக்கு தரவேண்டும் என காந்தி வற்புறுத்தினார்.
ராஜாஜியும், அம்பேத்கரும் மீதியுள்ள முஸ்லீம்களை பாகிஸ்தான் அனுப்பிவிட வேண்டும் என கூறியபோது காந்தி மறுத்துவிட்டார்.
இதனால் இன்றுவரை பாரத நாட்டில் பல இன்னல்கள் இந்துக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
ஆக நாடு துண்டாடப்பட்டதற்க்கு காரணம் வெள்ளையர்களும் காங்கிரஸின் தாஜா மனப்பான்மையும்தான்.
இந்த தாஜா செய்யும் மனப்பான்மை இன்று வரை தொடரந்து வந்து கண்டிருக்கிறது. இதே நிலை தொடருமானால் மீண்டும் பிரிவினையை நாடு சந்திக்க நேரிடும்.
இந்த தேசத்தின் ஒரு பிடி மண்ணையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
பிரிந்த இந்நாடு பிணைந்தெழ வைப்போம்.
பாரதத்தை உலகின் குருவாக ஆக்குவோம்.
"இழந்த நிலப்பரப்பை மீட்போம்
இழந்த மக்கள் தொகையை மீட்போம்
இழந்த கோவில்களை மீட்போம்
இருக்கின்ற கோவில்களை பராமரிப்பும்
பாரதத்தை இந்து நாடு என அறிவிக்க வைப்போம்"
அகண்ட பாரதம் அடைந்தே தீருவோம்.
பாரத் மாதா கீ ஜெய்......
வந்தேமாதரம். ...
வந்தேமாதரம். ...
No comments:
Post a Comment