Thursday, 18 August 2016

பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு அறிக்கை

இன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது...
5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை சுற்றிப் பார்த்து விட்டு, பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்பித்தது.
இதோ அந்த அறிக்கை...
இந்திய நாட்டின் நீள அகலங்களை சுற்றிப் பார்தோம்.
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை.
ஒரு திருடன் இல்லை.

அந்த அளவிற்கு செல்வச் செழிப்புடன் மதிப்புமிக்க நாடாக திகழ்கிறது.
இந்த நாட்டின் முதுகெலும்பாக திகழும் இவர்களின் ஆன்மீகம் மற்றும் தொன்மையான பாரம்பரியத்தை உடைத்து எறிந்தால் ஒழிய நாம் இவர்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.
ஆதலால் நான் தெரிவிப்பது என்னவென்றால், இவர்களின் தொன்மையான ,பண்டைய குருகுல கல்வி முறையை மாற்றி, அவர்களை சொந்தநாடு, மொழி, கலாச்சாரத்தை விட, வெளிநாடு தான் சிறந்தது, ஆங்கில மொழி தான் நல்லது ...உயர்ந்தது என்று அவர்களாகவே நினைக்கும் அளவிற்கு நாம் மாற்றினால்தான் இவர்கள் தங்கள் சுய மரியாதையை மற்றும் சொந்த கலாச்சாரத்தை இழப்பார்கள்.
பின் நமக்கு எப்படி தேவைப் படுவார்களோ அது போல் மாறுவார்கள்.
நம் ஆதிக்கம் நிறைந்த உண்மையான அடிமை நாடாக திகழும்.
இதுவே அந்த அறிக்கை.
பின் இவர்கள் திட்டத்தின் படி ஆங்கிலக் கல்வி முறை அரங்கேறியது.
"காலத்தே பயிர் செய்" என்பது இவனுக்கு தெரிந்திருக்கிறது போல. வெறும் அடிமை வேலை மட்டுமே செய்யக்கூடிய வகையிலும், சுய சிந்தனையை அறவே உதயமாகாத வகையிலும் இந்த கல்வி முறை வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்த நொடி வரை சுயமாக சிந்திக்க தெரியாத,
சுய அறிவில்லாத அடிமைகளை இந்த தொழிற்ச்சாலை உருவாக்கி வருகிறது.
சரி இதனால் நாம் இழந்ததுதான் என்ன ?...
*நம் சுயமரியாதையை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விவசாய முறையை இழந்தோம்.*
*நம் மரபு வழி வந்த மருத்துவத்தை இழந்தோம்.*
*நம் உதவும் நல்லுணவை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம்.*
*நம் பாரம்பரிய விளையாட்டுகளை இழந்தோம்.*
*நம் சொந்த நிலங்களை இழந்தோம்.*
*நம் ஆரோக்கியங்களை இழந்து நோயாளி ஆனோம்.*
*நம் அருமையான சுற்றுச்சூழல் தொலைந்து போகிறது.*
*நம் நிம்மதியான அன்பு வாழ்க்கை முறை பறி போனது* என ஒன்று விடாமல் ஒட்டு மொத்தமாக நம் சொந்த தாய்வழியான, பாரம்பரிய கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து, வெறும் உணர்ச்சியற்ற பிண்டங்களாக
பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
*எது வளர்ச்சி என்று தெரியாமல், நம்மை உருவாக்கிய, உயிரின் ஆதாரமாய் திகழக் கூடிய இயற்கை அன்னையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏதேதோ கூத்து நடந்து வருகிறது.*
நாமும் இதற்கெல்லாம் துணை போகிறோம் (நம்மை அப்படி வடிவமைத்துள்ளான்).
*இது நம் கழுத்தை நாமே அறுத்து விட்டு நான் வளர்ச்சியடையப் போகிறேன் என்று சொல்வது போல் உள்ளது.*
*நமக்கு வளர்ச்சியான வாழ்க்கை முறை தேவையல்ல.
வளமான நம் வாழ்க்கை தேவை.
வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
உண்மையான நிரந்தர சொத்தான நம் பாரம்பரிய உணவு, மருத்துவம் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்தையும் இழந்து பொய்யான தற்காலிக சொத்தான பணத்தை தேடி அலைகிறோம்.
இது கண்ணை விற்று கண்ணாடி வாங்கும் செயல்.*
சரி இதற்கு எல்லாம் தீர்வு என்ன ?
மீள முடியாதா ?.
முடியும்.
பாரம்பரியத்தை மீட்போம்.
அரசியலில் நீங்கள் சுய நலத்துக்கு செயல்படுவதை அறவே நிறுத்துங்கள்.
இனியாவது உணருங்கள்.
உண்மைக்கு குரல் கொடுங்கள்.
*இல்லையேல் செயற்கை உரம் ஆக்கப் பட போவது நாம் மட்டுமல்ல.. உங்கள் பிள்ளைகளும்,பேரன்-பேத்திகளும்...

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing