Tuesday, 29 November 2016

#பல்லாண்டுகள் பிணிகளின்றி இளமையுடன் நலமுடன் வாழலாம்


 அதிகாலையில் எழுபவன்
 பசித்த பின்  உணவை உண்டு வாழ்கிறவன் 
தாகமெடுத்த பின் நீர் அருந்துபவன்
இரவு 09.00 முதல் அதிகாலை 04.00 வரை உறங்குபவன்
 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்
 மண்பானைச் சமையலை உண்பவன்
 உணவை நன்கு மென்று உண்பவன்!
 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
குளிர்பானங்களை உபயோகிக்காதவன்
 மலச்சிக்கல் இல்லாதவன்

 கவலைப்படாத மனிதன்
 நாவடக்கம் உடையவன்
 படுத்தவுடன் தூங்குகிறவன்
 எந்த வீட்டில் குளிர்சாதனப்பெட்டி (ஃப்ரிட்ஜ்) இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
மழைநீர் பருகுபவன், மழைநீரில் நனைபவன்
 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன.
தூய்மையான காற்றை சுவாசிப்பவன்
தினமும் வெயிலில் தோய்பவன்
நல்ல மண்ணில் வெறுங்காலில் நடப்பவன்
தினமும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பவன்
பெருமை, அச்சம், கவலை, துக்கம், சினம் இவைகள் இல்லாதவன்
மேற்கண்ட நெறிகளை  வாழ்க்கை முறையாகக் கொள்வோர் அனைவரும்
பல்லாண்டுகள் பிணிகளின்றி இளமையுடன் நலமுடன் வாழலாம்.
அன்புடன் பழகி, அறத்துடன் பொருளீட்டி, நலமுடன் வாழ்ந்து. இப்புவியை நமக்கு பின் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சிதைக்காமல் விட்டுச்செல்வோம்.நன்றி!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing